IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

தமிழகம் உட்பட 5 மாநிலங்களிலிருந்து மேற்கு வங்கத்திற்குள் வர வேண்டாம்! மம்தா அதிரடி

Get real time updates directly on you device, subscribe now.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள தமிழ்நாடு உட்பட 5 மாநிலங்களிலிருந்து விமானம் மற்றும் சிறப்பு இரயில்கள் மேற்கு வங்காளத்திற்கு இயக்க வேண்டாம் என அம்மாநில முதல்வர் மம்தா பேனர்ஜி வலியுறுத்தி உள்ளார்.

இதுகுறித்து அவர் மத்திய அரசுக்கு கடிதம் எழுதி உள்ளார். அதில், மற்ற மாநிலங்களில் கொரேனா பரவலை தடுக்கும் வகையில், அதிக பாதிப்புகள் கொண்ட தமிழ்நாடு (86,224), மகாராஷ்டிரா (1,69,883),, டெல்லி (85,161),, குஜராத் (31,938) மற்றும் உத்தரபிரதேசம்(22,828). ஆகிய 5 மாநிலங்களில் இருந்து சிறப்பு ரயில்களை இயக்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

மேலும், விமானங்களையும் வாரம் ஒருமுறை மட்டும் அனுமதித்தால் போதும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார். இதனிடையே கொல்கத்தாவில் மெட்ரோ ரயில்களும் புறநகர் மின்சார ரயில்களும் ஆகஸ்ட் 12ம் தேதி வரை இயங்கத் தடை விதிக்கப்பட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader