விவசாயத்தை ஊக்குவிக்கும் இந்திய அரசின் சிறந்த திட்டங்கள்

Get real time updates directly on you device, subscribe now.

இந்தியாவில் விவசாயத்தை ஊக்குவிக்கும் நோக்கில் மத்திய, மாநில அரசுகள் விவசாயிகளுக்கு பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த திட்டங்களை விவசாயிகள் முறையாக பயன்படுத்திக் கொண்டால் போதும், விவசாயம் சார்ந்த பல பொருளாதார சிக்கல்களில் இருந்து விவசாயிகள் தங்களை பாதுகாத்துக்கொள்ள முடியும் என்கிறது அரசு தரப்பு.

அந்த வகையில் விவசாயிகளுக்கு பயனுள்ள சில முக்கிய திட்டங்கள் குறித்து இந்த கட்டுரையில் தெரிந்துகொள்ளலாம்.

பிரதமர் கிசான் சம்மான் நிதி திட்டம் (PM Kisan Samman Nidhi Yojana)

விவசாயிகளுக்கு அறிவித்துள்ள முக்கியமான திட்டங்களின் முதன்மையானதாக  இருக்கும் இந்த திட்டம், விவசாயிகளின் வாழ்வாதரத்தை உயர்த்தும் நோக்கில் கடந்த 2019 ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்த திட்டத்தின் மூலம் ஆண்டுக்கு 6,000 வழங்கப்படுகிறது. அதாவது, நான்கு மாதங்களுக்கு ஒரு முறை இத்திட்டத்தில் ரூ.2000/- வீதம் மூன்று தவணைகளில் விவசாயிகள் வங்கி கணக்கிற்கு செலுத்தப்படும். இத்திட்டம் சிறு, குறு, நடுத்தரம் மற்றும் பெரிய விவசாயிகளுக்கும் இப்போது வழங்கப்படுகிறது.

இருப்பினும் இந்த திட்டத்தில் விலக்கு அளிக்கப்பட்ட நபர்கள், அரசு பென்ஷன் பெறுவோர், நிறுவனத்தின் பெயரில் நிலம் உள்ளவர்கள், அரசியல்வாதி ஆகியவர்கள்.

இவர்கள் தவிர மற்ற அனைத்து விவசாயிகளும் இத்திட்டத்தில் சேர்ந்து பயன்பெறலாம்.

பிரதமரின் பயிர் காப்பீட்டுத் திட்டம் (Pradhan Mantri Fasal Bima Yojana)

எதிர்பாராமல் ஏற்படும் பயிர் சேதங்களுக்கு இழப்பீடு வழங்கி பாதுகாக்கவும், விவசாயிகளின் பண்ணை வருவாயை நிலைப்படுத்தவும் பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

ஒவ்வொரு பருவத்திற்கு ஏற்ப பயிர் காப்பீடு செய்துக்கொள்ள முடியும்.


பிரதமர் மன் தன் யோஜனா திட்டம் (Pradhan Mantri Kisan Maandhan Yojana)

பிரதமரின் கிஸான் மன் தன் என்ற திட்டம் ஒரு விவசாயிகளுக்கான பென்ஷன் திட்டமாகும்.

18 முதல் 40 வயது வரை உள்ளவர்கள் இத்திட்டத்தில் சேர்ந்து பயன்பெறலாம்.

18 வயதிற்கு ரூ.55 செலுத்த வேண்டும். பிரிமியம் தொகையை மாதந்தோறும், காலாண்டு, அரையாண்டு என வசதிக்கு ஏற்ப செலுத்தலாம். இதில் 60 வயதிற்கு பின்னர் மாதம் ரூ.3,000/- ஓய்வூதியம் பெறலாம்.

இந்த திட்டத்தில் இணைய தேவையான ஆவணங்களுடன் அருகில் உள்ள பொது சேவை மையத்துக்கு சென்று ஆன்லைன் மூலமாக பதிவு செய்யலாம்.

பிரதான் மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா திட்டம் (pradhan mantri suraksha bima yojana)

விபத்து காரணமாக ஏற்படும் இறப்பு அல்லது உடல் ஊனத்திற்கு எதிராக வழங்கப்படும் ஒரு காப்பீடு திட்டம் ஆகும்.

இந்தத் திட்டம் 18 முதல் 70 வயது வரை உள்ள தனிநபர்களுக்கு வழங்கப்படுகின்றது.

இந்த காப்பீடு திட்டத்தின் கீழ் தனி நபர் இறப்பிற்கு ரூ.2 லட்சமும், உடல் ஊனத்திற்கு ரூ.1 லட்சமும் இழப்பீடாக வழங்கப்படுகிறது.

இந்த திட்டத்தில் சேர நீங்கள் கணக்கு வைத்திருக்கும் வங்கியை அணுகி தேவையான படிவத்தை பூர்த்தி செய்ய வேண்டும்.

அனைத்து முக்கிய வங்கிகளும் இந்த திட்டத்தின் பங்கேற்பாளர்களாக இருக்கின்றன.

கால்நடை காப்பீடு

விவசாயிகள் தாங்கள் வளர்க்கும் கால்நடைகளுக்கு நோய்யுற்றாலோ அல்லது இயற்கை சீற்றத்தினால் இறந்துவிட்டாலோ அதனை ஈடு செய்யும் விதமாக இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது.

தேசிய கால்நடை இயக்கத்தின் கீழ் கால்நடைகள் மானியத்துடன் கூடிய காப்பீடு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில், வறுமை கோட்டிற்கு மேல் உள்ள கால்நடை வளர்போர்க்கு 50% மானியமும் வழங்கப்படுகிறது.

#welfareschemes #indianfarmers #in4net

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader