Home கட்டுரை கேபிள், DTH-க்கு Bye Bye சொல்லுவோம்! ஓடிடியை வரவேற்போம்

கேபிள், DTH-க்கு Bye Bye சொல்லுவோம்! ஓடிடியை வரவேற்போம்

0

ஆரம்ப காலத்தில் டிவி என்றாலே டிடி பொதிகை தொலைக்காட்சி மட்டுமே இருந்தன. பின்பு நாளடைவில் சன் தொலைக்காட்சி வந்தபின்பு டிவி பார்ப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கத் தொடங்கின.

சன் டிவி வந்த பின்பு கேபிள் டிவி வழியாகத் தான் தொலைக்காட்சி பார்க்கும் சூழ்நிலை ஏற்பட்டது. அதன் பின்பு DTH க்கு மாறிய பின்பு அதையும் தாண்டி தற்போது OTT க்கு மாற பழகிவிட்டோம்.

ஆரம்ப காலத்தில் கேபிள் டிவி, DTH போன்றவற்றை பார்க்க விரும்பியதற்கு காரணம் நிறைய சேனல்களை பார்க்கலாம். ஆனால் அவற்றில் சில நாட்களில் அmதிகளவிலான விளம்பரங்கள் ஒளிபரப்புவதால் டிவி பார்ப்பவர்களின் எண்ணிக்கையும் குறையத் தொடங்கியது.

குறிப்பாக சில தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் மட்டும் 30 நிமிடங்களுக்கு ஒரு முறை விளம்பரங்கள் என்பனவற்றை தாண்டி சில நிமிடங்களுக்கு இருந்த விளம்பரம் சில நிமிடங்களுக்கு நிகழ்ச்சி மீதி நேரம் முழுவதும் விளம்பரமானது.

நிகழ்ச்சிகளை தாண்டி சீரியல்கள் தலை தூக்க ஆரம்பிரத்த்தும் அனைத்தும் போலித்தனமாகி விட்டது. செயற்கை அழுகை, செயற்கை பாராட்டு, பில்டப் , தவறான உறவு குடும்ப உறுப்பினர்களை பலி வாங்கும் எண்ணம் என்று சலிப்பாகி விட்டது.

அனைத்தையும் விட விளம்பரம் பொறுக்கவே முடியாததாகி விட்டது. இதனால், டிவி சேனல்களை பார்ப்பதை பெரும்பாலான ஆண்கள் வெறுக்கத் தொடங்கிவிட்டனர்.

2014ல் சிங்கப்பூரில் Hero Talkies OTT என்ற தளம் அறிமுகமாகியது. ஆனால் தற்போது இவை உபயோகத்தில் இல்லை.

ஆனால் இந்தியாவில் கேபிள் டிவி பார்ப்பவர்களை விட DTH பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகரித்தன.

காரணம் சிறுவர்கள் மற்றும் பெரியவர்கள், முதியவர்கள் மற்றும் பெண்களுக்கென நிறைய நிகழ்ச்சிகள் ஒளிபரப்ப தொடங்கின.

இதனாலேயே DTH பார்ப்பவர்களின் எண்ணிக்கை கணிசமாக குறையத் தொடங்கின. ஓடிடி தளங்களில் படம் பார்ப்பவர்களில் வெளிநாட்டினவர்களை போன்று இந்தியாவிலும் அதிகமாக பார்க்க தொடங்கினர்.

குறிப்பாக கொரோனா காலத்தில் திரையரங்கிற்கு செல்லாமல் நேரிடையாகவே ஓடிடி தளங்களில் படங்கள் ரிலீசானதால் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றன.

குறிப்பாக குடும்பத்தினருடன் வீட்டிலேயே படம் பார்ப்பதால் அனைவரும் ஓடிடியை விரும்புகின்றனர்.

கொரோனா பாதிப்பு பலரின் தொழிலை மாற்றி விட்டது. அதில் ஒன்று திரைத்துறை.

தற்போது OTT க்காகவே திரைப்படங்கள் எடுக்கப்படும் அளவுக்கு முன்னேறி விட்டது. இது வளர்ந்து வரும் அறிமுக இயக்குனர்களுக்கு பெரும் வரப்பிரசாதமாக அமைந்துள்ளது.

புதுப்படங்களின் ரிலீசிற்காக விநியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்களுடனான பிரச்சனையால் தயாரிப்பாளர்கள் பலரும் OTT வெளியீட்டை விரும்புகிறார்கள்.

OTT நிறுவனங்களான Amazon Prime, NETFLIX, Disney+ Hotstar, Zee 5, SonyLIV, Sun NXT, Aha உட்படப் பல நிறுவனங்கள் படங்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுகின்றன.

குறிப்பாக ஆன்லைனில் கட்டணக்குறைப்பு உட்படப் பல சலுகைகளை வழங்கிச் சந்தாதாரர்களை ஈர்த்து வருகின்றன.

இந்நிலையில் திரைப்படங்களை அதிகம் பார்ப்பவர்களுக்கு ஓடிடி தளங்கள் நல்ல வசதியாக அமைந்துவிட்டது.

தற்போது கேபிள் டிவி மற்றும் DTH ஆகியவற்றை தவிர்த்து பலரும் OTT க்கு மாறி வருவதை உணர்ந்த TATA Sky நிறுவனம், பெயரை TATA Play என்று மாற்றி OTT சேவைகளையும் வழங்கி வருகிறது.

Jio போன்ற நிறுவனங்கள் Broadband உடன் OTT யையும் இலவசமாக வழங்கி வருகின்றன.

எனவ மாறிவரும் உலகில் நாமும் அடுத்தக்கட்ட முயற்சிக்கு செல்ல வேண்டியுள்ளதால் டிவி சீரியல் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தவிர்த்துவிட்டு ஓடிடி-யை வரவேற்போம்.

Exit mobile version