IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

மாஸ்க் அணிந்து உயிர்களை காத்திட கூகுள் வேண்டுகோள்

Get real time updates directly on you device, subscribe now.

கொரோனா தொற்றிலிருந்து காத்திட மாஸ்க் அணியுங்கள், உயிர்களை காத்திடுங்கள் என கூகுள் டூடுல் மூலம் வலியுறுத்தப்பட்டுள்ளது.

கூகுள் நிறுவனம் தனது சர்ச் இன்ஜினில் அவ்வப்போது முக்கிய நிகழ்வுகளை தனது டூடுலில் பதிவு செய்வது வழக்கம். அதன்படி தற்போது உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசில் இருந்து தங்களை காக்கும் வகையில் முக கவசம் அணிய டூடுலில் வலியுறுத்தியுள்ளது.

அதில் தெரிவித்து இருப்பதாவது: உண்மைகளை அறிந்து, தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் உங்களையும் உங்களைச் சுற்றியுள்ள மற்றவர்களையும் பாதுகாக்க முடியும். உள்ளூர் சுகாதார மையம் வழங்கும் ஆலோசனையை பின்பற்றுங்கள்.

கோவிட்-19 பரவுவதைத் தடுக்க உங்கள் கைகளை அடிக்கடி சுத்தம் செய்யுங்கள். சோப்புகளை பயன்படுத்தவும்.உடல் ரீதியான தூரம் சாத்தியமில்லாத போது முகமூடியை அணியுங்கள். உடல்நிலை சரியில்லாமல் இருந்தால் வீட்டிலேயே இருங்கள்.

காய்ச்சல், இருமல் மற்றும் சுவாசிப்பதில் சிரமம் இருந்தால், மருத்துவ சிகிச்சை பெறவும். மற்றவர்களுக்கு வைரஸ் பரவாமல் தடுக்க முககவசம் உதவும். முககவசம் மட்டும் கோவிட் 19க்கு எதிராக பாதுகாக்காது, மேலும் உடல் ரீதியான, சமூக இடைவெளி மற்றும் சுகாதாரத்தை கடைப்பிடிக்க வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Genuine Indian Payment Gateway

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader