IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

உலக சுகாதார அமைப்புடனான உறவை அதிபர் டிரம்ப் துண்டிக்க காரணம் என்ன?

Get real time updates directly on you device, subscribe now.

கொரோனா வைரஸ் விவகாரத்தில் ஒலக சுகாதார அமைப்பு சீனா சார்பு நிலையில் இருப்பதால் அந்த அமைப்புடனான உறவை மொத்தமாக துண்டித்துக் கொள்கிறோம் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிரடியாக தெரிவித்துள்ளார்.

சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் தாக்குதல் உலகெங்கும் பரவி பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் அமெரிக்கா கடுமையான அளவில் பாதிக்கபட்டுள்ள்து. இந்த வைரஸ் தாக்குதல் குறித்துச் சரியான நேரத்தில் உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை அளிக்காமல் சீனாவுக்கு ஆதரவாக இருந்ததால் உலகெங்கும் கொரோனா பரவியதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் ஏற்கனவே குற்றம் சாட்டி இருந்தார்.

இதனால் சீனாவுக்கு ஆதரவாக உலகசுகாதாரஅமைப்பு உள்ளதாக குற்றம் சாட்டியிருந்த அமெரிக்க அதிபர் அந்த அமைப்பிற்கு வழங்கும் நிதியை நிறுத்துவதாக அறிவித்தார். இதையடுத்து முதல்கட்டமாக கடந்த ஏப்ரலில் ரூ.3000 கோடி நிதியை டிரம்ப் நிறுத்தினார்.

நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த டிரம்ப் கூறுகையில், உலகம் முழுவதும் கொரோனா வைரசை பரப்பிய சீனாவின் பிடியில் உலக சுகாதார அமைப்பு சிக்கியுள்ளது. ஆண்டிற்கு 450 மில்லியன் டாலர் வழங்கி வந்த அமெரிக்காவின் உறவை விட ஆண்டுக்கு 40 மில்லியன் டாலர் கொடுக்கும் சீனாவுடன் உலக சுகாதார அமைப்பு உறவு வைத்துள்ளது. இது தவறு உடனே திருத்திக்கொள்ளுமாறு உலக சுகாதார அமைப்பினை வலியுறுத்தியும் செவி சாய்க்கவில்லை.

இனி அந்த அமைப்புடனான உறவை அமெரிக்கா துண்டித்துக் கொள்கிறது. அந்த அமைப்பிற்கு வழங்கும் நிதியை வேறு சுகாதார அமைப்பிற்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader