IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

பங்குச்சந்தையின் சிங்கம் வாரன் வாரன் பஃபெட்டின் வெற்றிக்கதை

Get real time updates directly on you device, subscribe now.

வாரனின் நெருக்கமான தோழன் ஒருவனின் வீடு, மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதிகயில் அமைந்திருந்தது. அதனால் அந்த இடத்தில் இருவரும் கூட்டாகச் சேர்ந்து முதலில் எழுமிச்சை ஜுஸ் கடை போட்டுள்ளார்கள்.

அதேசமயம் பாக்கெட் மணியாக கிடைக்கும் பணத்தை மற்ற சிறுவர்கள் போல பொம்மை வாங்கி வாரன் பஃபெட் விளையாடவில்லை.
முதல் முதலீடு

மாறாக அதை அமெரிக்க பங்குச்சந்தையில் முதலீடு செய்தார். அப்போது அவருக்கு வயது 11.

அமெரிக்காவின் ஒமாஹா நகரில் பஃபெட் சன் என்ற பெயரில் மளிகைக் கடை நடத்திக்கொண்டிருந்த வாரனின் தாத்தா, அந்த ஏரியாவில் பிரபலமான வியாபாரி.

தாத்தாவுக்கும் ஆறு வயது பொடியன் வாரன் பஃபெட்டுக்கும் ஒரு பிசினஸ் உடன்படிக்கை உருவானது. அதன்படி தாத்தா ஆறு டின் அடங்கிய கோகோ கோலாவை 25 சென்டுக்கு பேரனிடம் விற்பார்.

பேரன் அதை வீடு வீடாக எடுத்துச்சென்று ஒரு டின் 5 சென்ட் என்று சில்லறையாக விற்பார். விற்ற பின்பு, மொத்தம் 30 சென்ட் கையில் மிச்சமிருக்கும். அதில் வாரனுக்கு 5 சென்ட் லாபம்.

இளம் வயதிலேயே வாரன் மனதில் பிசினஸ் ஆர்வம் குடிகொண்டதற்கு மிக முக்கியமான காரணம் அவருடைய குடும்பச் சூழ்நிலைதான். அவர் மிகவும் சிரமமான சூழலில் பிறந்தார்.

அப்போது அமெரிக்கா நெடுகிலம் பஞ்சம் தலைவிரித்தாடியது. வாரன் 11 மாதம் பச்சிளம் குழந்தையாக இருக்கும்போது அவருடையை தந்தைக்கு வேலை பறிபோனது. அடுத்தவேளை ரொட்டிக்கே மிகுந்த சிரமம் என்கிற அளவுக்கு நிலைமை மோசமாக இருந்தது.

வாரனின் தாத்தா, கடையில் இருந்து மளிகை பொருட்களை கடனாக கொடுத்து குடும்பம் உயிர் வாழ உதவி செய்தார் என்று தான் சொல்ல வேண்டும்.

சொந்த மகன் தான் என்றபோதும் ஒரு காலகட்டத்தில் கடனை திருப்பிக்கொடுக்குமாறு வாரனின் தந்தைக்கு நெருக்கடி தர ஆரம்பித்தார் தாத்தா.

வேறு எங்கும் வேலை கிடைக்கவில்லை அதனால் வாரன் பஃபெட்டின் தந்தை சொந்தமாகவே தொழில் தொடங்கினார். அபாரமாக ஒன்றும் சாதிக்கவில்லை.

ஏதோ வாய்க்கும் வயிற்றுக்கம் சரியாக வாழ்க்கை ஓடியது. வாரன் வளர்ந்து பள்ளிக்கூடம் செல்லத்துவங்கி வீடு வீடாக சென்று கோக் விற்ற சமயத்தில்
அவருடைய தந்தையின் பிசினஸ் ஓரளவு மேம்பட்டது.

இதேவேளையில் பங்குகள் பற்றிய அறிமுகம் வாரன் பஃபெட்டுக்கு சிறுவயதிலேயே கிடைத்தது. அதற்குகாரணம், அவருடைய தந்தை செய்த பங்கு தரகர் தொழில் தான். அப்பாவின் கடையில் பங்கு விலைகளை பலகையில் எழுதி வைப்பதில் சிறுவன் வாரன் பஃபெட்டுக்கு அத்தனை மகிழ்ச்சி.

அதேபோல தாத்தாவின் மளிகை கடையில் கூடமாட உதவி செய்தால் அதற்கு ஊதியம் கிடைத்தது. அதேபோல கோக் விற்றதில் கொஞ்சமாக லாபம் கிடைத்தது. பெற்றோர் மற்ற உறவினர்கள் அவ்வப்போது செலவுக்காக காசு கொடுத்தார்கள்.

இப்படி எல்லா வகையிலும் சேர்த்த பணத்தை வைத்து மற்ற பையன்களை போல பொம்மை வாங்கி விளையாடவில்லை.

அந்த பணத்தை பங்குச்சந்தையில் இறங்கி விளையாட துணிந்தார். அப்போது சிறுவன் வாரன் பஃபெட்டுக்கு 11 வயது தான்.

சிட்டிஸ் சர்வீஸ் என்ற கம்பெனியின் ஆறு பங்குகளை தலா 38 டாலர் என்ற விலைக்கு வாங்கினார். அதில் மூன்று அவருக்கு, மீதம் மூன்று அவருடைய அக்காவுக்கு. ஆனால் அவர் முதலீடு செய்த பிறகு அந்த பங்கு விலை சரிந்து 27 டாலருக்கு சென்றது. பதறிப்போனார் பஃபெட்.

இருப்பினும் சட்டென நிலைமை மேம்பட்டு 40 டாலருக்கு முன்னேறி வந்தது.

அப்பாடா ! வந்தது போதும் என்று நிம்மதி பெருமூச்சு விட்டதோடு கையிலிருந்த மூன்று பங்குகளையும் விற்றுவிட்டார். பங்கு தரகு போக, அந்த வியாபாரத்தில் அவருக்கு 5 டாலர் கிடைத்தது. ஆனால் அந்த நிறுவனத்தின் பங்குவிலை 40 டாலரை தாண்டி அட்டகாசமாக உயர்ந்து 200 டாலர் வரை போனது.

நல்ல முதலீடு என்றால் அவசரப்பட்டு விற்காமல் பொறுமையாக காத்திருக்க வேண்டும் என்று தெரிந்துகொண்டார். பங்கு முதலீட்டில் வாரன் கற்றுக்கொண்ட முதல் பாடம் இதுதான். இன்றைய தலைமுறையினருக்கு அவர் கற்றுக்கொடுக்கும் பாடமும் இதுதான்.

தன்னுடைய 13 வயதில் வாரன் பஃபெட் ஒரு பந்தயம் கட்டினர். அது, 30 வயதுக்குள் மில்லியனர் ஆகிவிடுவது. ஒருவேளை அப்படி ஆகாமல் போனால் ஒமாஹாவின் உயரமான கட்டிடத்தின் உச்சியில் இருந்து குதித்து விடுவது. இந்த பந்தயத்திலும் ஜெயித்தார் வாரன் பஃபெட்.

தான் வாங்க இருக்கும் நிறுவனங்களின் நிதி நிலை அறிக்கைகளையோ, ஆண்டறிக்கைகளையோ முழுக்க முழுக்க ப்ரிண்ட் அவுட் எடுத்து வரிக்கு வரி படித்தே முடிவு செய்வார்.

அவர் எப்படி நல்ல பங்குகளை (நிறுவனத்தின் பங்குகளை) வாங்குகிறார் என்பதைத் தான் இதில் பார்க்க வேண்டும். அதைப் பார்ப்போமா…?

“பெருசா நினைங்க, அப்ப தான் பெருசா சாதிக்கலாம். நீங்கள் நினைப்பது போல முதலீடுகள், அல்ல. அது உங்களைக் காக்கும் சொத்துக்கள்” என்கிறார் வாரன்.
அப்படி என்றால் லாபம் சம்பாதிக்கும் எண்ணத்தை கைவிடுங்கள். சொத்துக்களை உருவாக்குங்கள் என்கிறார்.

ஒரே நாளில் ரோமாபுரி கட்டடப்படவில்லை. அதே போல் தான் பங்குச் சந்தை மூலம் சொத்துருவாக்கமும். நமக்கு எது சரிபட்டு வரும், சரிப்பட்டு வராது என்பவைகளை நீங்கள் தான் உணர்ந்து கொள்ள வேண்டும்.

ஒருவருக்கு பங்குச் சந்தையில் முன் கூட்டியே டிரெண்டுகளை பிடிக்கத் தெரியும்.

இன்னொருவருக்கு வந்த டிரெண்டில் நல்ல பங்குகளை கண்டு பிடிக்கத் தெரியும், இன்னொருவருக்கு டெக்னிக்கலான சார்ட்டுகளைப் பார்த்து நீண்ட காலத்துக்கு நல்ல பங்குகளை கண்டு பிடிக்கத் தெரியும், இப்படி எதில் நம் திறமை இருக்கிறது, என்பதை நாம் தான் உணர்ந்து கொள்ள வேண்டும். என்கிறார் வாரன் பஃபெட்.
மிக முக்கியமாக எல்லா நுணுக்கமும் எல்லா நேரத்திலும் செயல்படும் என எதிர்பார்க்காதீர்கள். எனவும் எச்சரிக்கிறார்.

நிறுவனங்களைப் பற்றி அறியுங்கள்!

நீங்கள் வாங்குகிற நிறுவனங்கள் நீண்ட காலத்துக்கு எப்படி இருக்கும் என்பதைத் தெரிந்துகொள்ள அதன் விற்பனை, வருவாய் மற்றும் லாபம் எப்படி இருக்கிறது என்பதைக் கணக்கில் எடுத்துக்கொள்ளலாம். இவையெல்லாம் தொடர்ந்து அதிகரித்திருந்தால், தானாகவே அந்த நிறுவனத்தின் பங்கின் விலையும் அதிகரிக்கும்.

செக்டார் லீடர்களின் நிறுவன பங்குகளில் முதலீடு செய்யுங்கள். அவர்கள்தான் அந்தக் காலத்தின் ட்ரெண்டாக இருப்பார்கள். நம்மில் பலர், இருக்கும் ட்ரெண்டை விட்டுவிட்டு வரப்போகும் ட்ரெண்டை கணிக்கத் தொடங்குகிறோம்.

அதேபோல், செக்டார் லீடராக இருக்கும் நிறுவனத்தின் பங்குகளின் விலைகள் குறையத் தொடங்கினாலோ அல்லது தேக்கமடையத் தொடங்கினாலோ அந்த ட்ரெண்டின் தாக்கம் குறையத் தொடங்கி, வேறொரு ட்ரெண்ட் உருவாகத் தொடங்குகிறது என்று அர்த்தம்.

கடன் உங்களை காலி செய்யும்..!

உங்கள் முதலீடுகளில் அல்லது மொத்த முதலீட்டுப் போர்ட்ஃபோலியோவில் 6 – 8 பங்குகளை வாங்கி அதைச் சரியாக நிர்வகிப்பதே பெரிய விஷயம்.

உங்கள் இஷ்டத்துக்கு 40 – 50 பங்குகளில் முதலீடு செய்கிரீர்கள் என்றால் நிங்கள் உங்கள் பணத்தை இழப்பதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதை உறுதி செய்வதற்குச் சமம்.

உங்களால் 50 நிறுவனங்களின் நிதி நிலை, நிர்வாகப் பிரச்னைகள், 50 நிறுவனங்கள் தொடர்பாக அரசு கொண்டு வரும் கொள்கை முடிவுகள், இந்த 50 நிறுவனங்களின் எதிர்காலத் திட்டங்கள் என அத்தைனை விஷயங்களையும் பின் தொடர முடியுமா..? முடியும் என்றால் நீங்கள் தாராளமாக 50 பங்குகளை வாங்கலாம்.

ஆனால் எதார்த்தத்தில் இது முடியாத காரியம் என்பதால் ஐந்து பங்குகள் நல்ல சாய்ஸாக இருக்கும். எனவே உங்களுக்கான அந்த ஐந்து பங்குகளைக் கண்டுபிடியுங்கள் என்கிறார் வாரன் பஃபெட்.

ஏறத்தாழ ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக வாரன் பஃபெட், பங்குச் சந்தை முதலீட்டில் வெற்றிகரமாக முதலீடு செய்துவருகிறார் என்பது ஒரு காரணம் என்றாலும், பங்குச் சந்தை மற்றும் உலகப் பொருளாதாரத்தில் ஏற்பட்ட பல்வேறு ஏற்ற இறக்கங்களையும் சர்வசாதாரணமாகக் கடந்து, ஒரு வெற்றிகரமான முதலீட்டாளராக வலம் வருகிறார் என்பதுதான் அவரிடம் உள்ள தனிச் சிறப்பு.

பொன்மொழிகள்

நேர்மை என்பது மிகவும் விலை உயர்ந்த பரிசு. அதை மலிவானவர்களிடம் எதிர்பார்க்காதீர்கள்.

உங்களுக்கு தேவையில்லாத பொருட்களை நீங்கள் வாங்கினால் ஒரு நாள் உங்களுக்கு தேவையான பொருட்களை விற்க நேரிடும்.

விலை என்பது உங்களால் கொடுக்கப்படுவது. மதிப்பு என்பது உங்களால் விற்கப்படுவது.

செலவிற்கு பிறகு இருப்பதை சேமிக்காதீர்கள். மாறாக சேமிப்பிற்கு பிறகு இருப்பதை செலவிடுங்கள்.

நீண்ட காலத்திற்கு முன்பு யாரோ ஒரு மரத்தை நட்டதால் யாரோ ஒருவர் இன்று நிழலில் அமர்ந்திருக்கிறார்.

நீங்கள் புரிந்து கொள்ள முடியாத ஒரு வணிகத்தில் ஒருபோதும் முதலீடு செய்யாதீர்கள்.

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader