IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

விசாகப்பட்டினம் LG பாலிமர்ஸ் ரசாயன ஆலையில் விஷவாயு வெளியானது எப்படி? திடுக்கிடும் தகவல்

Get real time updates directly on you device, subscribe now.

ஆந்திராவின் விசாகப்பட்டினம் மாவட்டத்தில் RR வெங்கடபுரம் கிராமத்தில் LG பாலிமர்ஸ் என்ற ரசாயன ஆலையில் எரிவாயு கசிவில் இறந்தவர்களின் எண்ணிக்கை வியாழக்கிழமை 11-ஆக உயர்ந்தது.

ஆந்திர மாநிலத்தில் உள்ள விசாகப்பட்டினத்தில் அமைந்துள்ள எல்ஜி கெமிக்கல்ஸ் (LG Chem) எனும் கொரிய நிறுவனத்தில் நேற்று நள்ளிரவு 2.30 மணியளவில் ஏற்பட்ட திடீர் விஷவாயு கசிவால், அந்த தொழிற்சாலை சுற்றுப்புற பகுதியில் இருந்த சுமார் 1000ற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிலர் மோசமான நிலையில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

கோபாலபட்டினத்திற்கு அருகிலுள்ள வேபகுந்தாவின் எல்ஜி பாலிமர்களிடமிருந்து கசிந்த பாலி வினைல் குளோரைடு வாயு கசிவால் ஏராளமான மக்கள் மயக்கமடைந்தனர். மக்கள் வாந்தி மற்றும் குமட்டல் இருப்பதாக புகார் கூறுகின்றனர்.

இந்த வாயுவின் தாக்கம் தொழிற்சாலையை சுற்றி சுமார் 3 கிமீ சுற்றுப்பரப்புக்குப் பரவிய நிலையில், அந்த பகுதியில் இருந்த பல கிராம மக்கள் வாயுவை சுவாசித்ததும் அந்த இடத்திலேயே மயங்கி விழுந்தனர். இருசக்கர வாகனத்தில் வந்தவர்களும், ரோட்டிலேயே மயங்கி விழுந்த நிகழ்வுகளும், காடுகளுக்கு சென்றவர்கள் அங்கேயே மயங்கிவிழுந்த சம்பவங்களும் நடந்தேறியது.

இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வாயு கசிவில் சிக்கி 6 வயது சிறுமி உட்பட 7 பேர் பலியாகி உள்ளதாக முதல்கட்ட தவல்கள் வெளியாகி உள்ளது.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும், தீயணைப்பு துறையினர் தகுந்த பாதுகாப்பு கொடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து மயங்கி கிடந்தவர்களை அங்கிருந்து மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அந்த பகுதியில் உள்ள கிராமங்களைச் சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் அந்த பகுதியில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டு உள்ளனர்.

இதுவரை 200க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக ஆந்திர மருத்துவக் கல்லூரி முதல்வர் உறுதி செய்துள்ளார். இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. வாயுபரவலை தடுக்கும் வகையில், ரசாயண ஆலை மீது தண்ணீர் பீய்ச்சி அடிக்கப்பட்டு வருகிறது. மக்கள் முகக்கவசம் அணியவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் வாயுக்கசிவில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 11 ஆக அதிகரித்துள்ளது. ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

ஸ்டைரீன் என்று நம்பப்படும் எரிவாயு நடுநிலையானது என்றும், அருகிலுள்ள பகுதிகளில் இருந்து கிராம மக்களை வெளியேற்று வதற்காக NDRF குழு அந்த இடத்தை அடைந்துள்ளது என்றும் அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

எரிவாயு கசிவின் அதிகபட்ச தாக்கம் சுமார் 1-1.5 கி.மீ.யில் இருந்தது. ஆனால் வாசனை 2-2.5 கி.மீ. வரை இருந்ததாகவும், விசாகப்பட்டினம் நகரத்தின் காவல் அதிகாரி RK மீனா தெரிவித்துள்ளார். மேலும் இந்த சம்பவம் குறித்து முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader