IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

வழிப்பறி மற்றும் தொடர் திருட்டில் ஈடுபட்ட கொள்ளையன் போலீசாரிடம் சிக்கியது எப்படி?

0 32

விருதுநகர், காரியாபட்டி மற்றும் அருப்புக்கோட்டை ஆகிய பகுதிகளில் தொடர் திருட்டு மற்றும் வழிப்பறிகளில் ஈடுபட்டுவந்த பிரபல கொள்ளையனை போலீசார் கைது செய்துள்ளனர். அவனிடமிருந்து சுமார் 78 பவுன் நகைகள் மீட்கப்பட்டுள்ளன.

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள பாலையம்பட்டியைச் சேர்ந்தவர் முருகபூபதி (வயது34). இவர் தண்ணீர் சப்ளை செய்து வருபவர். சம்பவத்தன்று பண வசூலுக்காக பந்தல்குடி வரை சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை வழிமறித்து 2 பவுன் சங்கிலியை பறித்துவிட்டு ஓடினான். இதனைக் கண்ட பொதுமக்கள் திருடனை விரட்டிச் சென்றனர்.

பொதுமக்களுக்கு பயந்து ஓடிய திருடன் அந்தப்பகுதியில் உள்ள வீட்டின் மாடியில் பதுங்கினான். உடனே பொதுமக்கள் அனைவரும் ஒன்று கூடி அவனை பிடித்து பந்தல்குடி போலீசாரிடம் ஒப்படைத்தனர். விசாரணையில் பிடிபட்ட திருடன் பெயர் மண்கண்டன்(32) என்பதும் சேலம் மாவட்டம் கண்ணங்குறிச்சியைச் சேர்ந்த பிரபல கொள்ளையன் என்பது தெரியவந்தது.

மேலும் விருதுநகர், காரியாபட்டி, அருப்புக்கோட்டை, தென்காசி மற்றும் பொள்ளாச்சி உள்ளிட்ட 15ற்கும் மேற்பட்ட பகுதிகளில் பூட்டியிருந்த வீட்டை நோட்டமிட்டு பின்பு வீடுகளில் கொள்ளையடித்திருப்பதும் மற்றும் வழிப்பறி சம்பவங்களில் கொள்ளையன் மணிகண்டன் ஈடுபட்டுள்ளதும் விசாரணையில் தெரியவந்தது.

கொள்ளையன் மணிகண்டன் மீது ஏற்கனவே 2 கொலை வழக்குகள் பதியபட்டிருப்பதும் விசாரணையில் தெரியவந்தது. போலீசார் அவனை கைது செய்து விசாரிக்கும் போது அவனிடமிருந்து 78 பவுன் நகைகளை மீட்டனர். பிடிபட்ட நகைகள் எவரிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்டது என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.