IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

எஸ்.ஐ. தேர்வில் பிட் அடித்து கையும்,களவுமாக சிக்கிய காவலர்

Get real time updates directly on you device, subscribe now.

 

விழுப்புரத்தில் எஸ்.ஐ. பணிக்கான தேர்வில் பிட் அடித்த காவலர் கையும், களவுமாக பிடிபட்டார். அவருக்கு துறைத்தேர்வு எழுத மூன்று ஆண்டுகள் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் சார்பில் காவலர் பதவியில் உள்ளவர்கள் காவல் உதவி ஆய்வாளர் பதவி பெறுவதற்கான எழுத்துத்தேர்வு தமிழகம் முழுவதும் நடைபெற்றது. விழுப்புரம் மாவட்டத்தில் விண்ணப்பித்தவர்களுக்கு விழுப்புரம் தெய்வானை அம்மாள் மகளிர் கல்லூரியில் இத்தேர்வு தேர்வு நடந்தது.

ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இத்தேர்வினை எழுதினர். எஸ்பி ஜெயக்குமார் தலைமையில் டிஎஸ்பிக்கள் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அங்குள்ள ஒரு தேர்வு அறையில் டிஎஸ்பி ரவீந்திரன் ஆய்வு செய்த போது காவலர் ஒருவர் தனது உடலில் மறைத்து வைத்திருந்த துண்டு சீட்டுகளை வைத்து பிட் அடித்து எழுதியது தெரியவந்தது.

விசாரணையில், பிட் அடித்து கையும், களவுமாக மாட்டிய அவர் அனந்தபுரம் காவல் நிலையத்தில் முதல்நிலை காவலராக பணியாற்றும் மணி என்பது தெரியவந்தது. உடனடியாக அவருக்கு தேர்வெழுத அனுமதி மறுத்து, தேர்வு மையத்திலிருந்து வெளியேற்றப்பட்டார் பின்னர் அவரை தேர்வு நடத்தும் தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வாணைய அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

தேர்வில் பிட் அடித்ததால் காவலர் மணிக்கு துறைத்தேர்வு எழுத மூன்று ஆண்டுகள் தடைவிதிக்கப்பட்டுள்ளது எனவும், அவர் மீது துறை ரீதியான நடவடிக்கையும் எடுக்கப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

#viluppuram #SI #Exam #copy #issue #man #arrested

 

Comments are closed, but trackbacks and pingbacks are open.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More