IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

71 வது குடியரசு தினத்தை முன்னிட்டு 71 மரக்கன்றுகளை நட்ட கிராமத்து இளைஞர்கள்

155

 

71 வது குடியரசு தினத்தை முன்னிட்டு கிராம இளைஞர்கள் சார்பாக 71 மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே கோடாங்கிபட்டி கிராமத்தில் மந்தை திடலில் அமைந்துள்ள கோடாங்கி அம்மன் கோவில் முன்பாக 71வது குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. இதைமுன்னிட்டு கிராம இளைஞர்கள் சார்பாக 71 மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.

இதில் திரளான கிராம இளைஞர்கள் கலந்துகொண்டு சுற்றுச்சூழலை பாதுகாக்கவும் வீடுதோறும் அதிகப்படியான ஆக்சிஜன் தரக்கூடிய மரங்களை வளர்க்க வேண்டும் எனவும் தமது கிராமத்தை பசுமை நிறைந்த கிராமமாக மாற்றவும் இந்த மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது.

Related Posts
1 of 74

இதில் அதிகப்படியான ஆக்சிஜன் தரக்கூடிய ஆலமரம், வேப்பமரம், புங்கை, மூங்கில் உள்ளிட்ட 21 வகையான மரக்கன்றுகள் நடப்பட்டது. இந்த விழாவில் கிராம இளைஞர்களும் ஊராட்சி மன்ற தலைவர், ஒன்றிய கவுன்சிலர், ஊராட்சி செயலாளர், கிராம பெரியோர்கள், பொதுமக்கள் என 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். கிராமப்பகுதிகளில் வீட்டுக்கு ஒரு மரம் வளர்த்து மழை பெறுவது அவசியம் எனவும் இதில் வலியுறுத்தப்பட்டது.

#Village #youth #planting #71trees #honor #71stRepublicDay