IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

நான்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு சதவீதம் வெளியீடு

0 23

தமிழகத்தின் விக்கிரவாண்டி, நான்குநேரி மற்றும் புதுச்சேரியின் காமராஜ் நகர் தொகுதியிலும் இன்று இடைத்தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது.

இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணியுடன் முடிவடைந்தது. இதில் விக்கிரவாண்டி தொகுதியில் 84.36 சதவீத வாக்குபதிவுகளும், நான்குநேரி தொகுதியில் 66.10 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளது. அதுபோல பாண்டிச்சேரி காமராஜ் நகர் தொகுதியில் மொத்தமாக 69.44 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.

நடந்து முடிந்த தேர்தலில் பதிவான வாக்குகள் வரும் 24ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

இன்று மாலை தேர்தல் நடக்கும் பகுதியில் அத்துமீறி நுழைந்ததாக கூறி காங்கிரஸ் கட்சியை சேர்ந்த வசந்த குமார் எம்.பி.யை கைது செய்யப்பட்டதையடுத்து விசாரணைக்கு பிறகு நிபந்தணைகளின் படி விடுதலை செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
#Vikrawandi #Nanguneri #Puducherry #KamarajNagar #Election2019