IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

விக்கிரவாண்டி, நான்குநேரி தொகுதிகளில் அதிமுக வெற்றி பெருவதற்கான காரணங்கள் வெளியீடு

0 45

விக்கிரவாண்டி தொகுதியில் திமுக வேட்பாளர் புகழேந்தியை தோற்கடித்து அதிமுக வேட்பாளர் முத்தமிழ் செல்வன் அமோக வெற்றி பெற்றுள்ளார்.

அதிமுக வேட்பாளர் முத்தமிழ்ச்செல்வன் 1 லட்சத்து 13 ஆயிரத்து 428 வாக்குகளும், திமுக வேட்பாளர் புகழேந்தி 68, 646 வாக்குகளும் பெற்றுள்ளனர். முத்தமிழ்ச்செல்வன் 44,551 வாக்கு வித்தியாசத்தில் அமோக வெற்றி பெற்றுள்ளார்.

நான்குநேரி தொகுதியிலும் அதிமுக வேட்பாளர் நாராயணன் அமோக வெற்றி பெற்றுள்ளார். 32 ஆயிரத்து 811 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். அதிமுக-வைச் சேர்ந்த நாராயணன் 94 ஆயிரத்து 802 வாக்குகள் பெற்றுள்ளார். இவரை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ரூபி மனோகரன் 61ஆயிரத்து 991 வாக்குகள் பெற்றுள்ளார்.

இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர்கள் போட்டியிட்ட விக்கிரவாண்டி மற்றும் நான்குநேரி இரு தொகுதிகளிலும் அதிமுக அமோக வெற்றி பெற்றுள்ளது. இதன்மூலம் அதிமுக எம்.எல்.ஏ-க்களின் எண்ணிக்கை 124ஆக உயர்ந்துள்ளது.

இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெற பாஜகவின் பங்களிப்பு முக்கிய காரணம் என்றும் தமிழக மக்கள் பாஜகவை எதிர்பார்க்க தொடங்கி விட்டார்கள் என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.