IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

விக்ரம் லேண்டரை கண்டுபிடிக்க முடியவில்லை: நாசா

5


சந்திரயான்-2 விண்கலத்தின் விக்ரம் லேண்டர், நிலவின் தென்துருவப்பகுதியில் தரை இறங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தரை இறங்க வேண்டிய இடத்தில் இருந்து 2.1 கி.மீ. தொலைவில் இருந்தபோது, விக்ரம் லேண்டரின் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டு விட்டது. அதைத்தொடர்ந்து விக்ரம் லேண்டருடன் தகவல் தொடர்பை மீண்டும் ஏற்படுத்தும் முயற்சியில் இஸ்ரோவும், அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு நாசாவும் ஈடுபட்டன. ஆனால் அந்த முயற்சி வெற்றி பெறவில்லை. 14 நாட்கள் ஆன நிலையில் கடந்த 20-ந் தேதி அதன் ஆயுளும் முடிந்து விட்டது. இந்த நிலையில், விக்ரம் லேண்டர் ஹார்டு லேண்டிங் ஆன இடத்தை நாசாவின் ஆர்பிட்டர் புகைப்படம் எடுத்துள்ளது. எனினும் விக்ரம் லேண்டரை கண்டறிய முடியவில்லை என்று நாசா தெரிவித்துள்ளது.


#Vikram Lander #Unable find #NASA