விஜய், சூர்யா இணைந்து மிரட்டிய நேருக்கு நேர் படம்

Get real time updates directly on you device, subscribe now.

ஆசை படத்தினை தொடர்ந்து மீண்டும் மணிரத்னம் வஸந்த் இணைந்து உருவாக்கிய படம் நேருக்கு நேர். இந்த படத்தின் வஸந்த இயக்க மணிரத்னம் தயாரித்தார். இரட்டை நாயகர்கள் படமான இதில் விஜய், அஜித் ஆகியோர் முதலில் நடித்தனர். சில நாட்கள் படப்பிடிப்பு நடந்த நிலையில், சில பிரச்னைகளால், அஜித் படத்திலிருந்து விலகினார்.

இதனையடுத்து, அந்த கதாபாத்திரத்தில் நடிகர் சூர்யா நடித்தார். சூர்யாவின் முதல் படம் இது. சினிமாவில் அறிமுகமான சூர்யாவிற்கு, அப்போது அஜித் வாழ்த்தும் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரிந்துவாழும் தம்பதியான ரகுவரன் – சாந்தி கிருஷ்ணாவின் தம்பிகளாக முறையே விஜய், சூர்யா இருவரும் பார்க்கும் இடங்களில் எல்லாம் முட்டிக் கொள்கின்றனர். ரகுவரனின் குழந்தைக்கு ஆபத்து வருகையில் விஜய், சூர்யா இரண்டு பேரும் இணைந்து காப்பாற்றுகின்றனர்.

மணிரத்னம் சுட்ட, அக்னி நட்சத்திரம் தோசையில் முட்டையை ஊற்றி, நேருக்கு நேர் எனக் கொடுத்தார் வஸந்த். அதே நேரம், காதல் காட்சிகளில் தன் முத்திரை பதித்து கிளாப்ஸ் வாங்கிவிட்டார் வஸந்த்.

அமைதியாக வில்லத்தனம் செய்யும் கரண் ரசிக்க வைத்தார். வழக்கம் போல ரகுவரன், தன் அனுபவ நடிப்பால், கைத்தட்டல் வாங்கினார். தேவாவின் இசையில், ‘அவள் வருவாளா, மனம் விரும்புதே, எங்கெங்கே எங்கெங்கே, அகிலா அகிலா, துடிக்கின்ற காதல்…’ என அனைத்துப் பாடல்களும், சூப்பர் ஹிட்டாக அமைந்தன.

தற்போதும், இந்தப்படத்தின் பாடல்களுக்கு ரசிகர் கூட்டம் உண்டு.கே.வி.ஆனந்தின் ஒளிப்பதிவும், லெனின் – வி.டி.விஜயனின் படத்தொகுப்பும் படத்தின் தரத்தை மெருகேற்றி அழகுபடுத்தின.

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More