IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

கிங் பிஷர் விஜய் மல்லையாவின் தோல்விக்கதை

121

திப்புசுல்தான் பயன்படுத்திய வாளை தொழிலதிபர் விஜய் மல்லையா பெருந்தொகை கொடுத்து ஏலம் எடுத்த சமயம், இந்தியா வர்த்தகத்தின் நம்பிக்கை நட்சத்திரம் என்ற உச்சியில் இருந்த மல்லையாவின் வரலாறை இந்த கட்டுரை அலசுகிறது.

வாழ்க்கை

விஜய் மல்லையா, விட்டல் மல்லையா – லலிதா தம்பதிக்கு மகனாக 1955-ம் ஆண்டு டிசம்பர் 18-ந் தேதி பிறந்தார். கொல்கத்தாவில் உள்ள லா மார்டிநீர் பள்ளியில் ஆரம்ப கல்வியை முடித்தார்.
பட்டப்படிப்பை கொல்கத்தாவில் உள்ள புனித சேவியர்ஸ் கல்லூரியில் முடித்தார்.

கலிபோர்னியா தெற்கு பல்கலைக்கழகம் இவருக்கு, இவரது வணிக நிர்வாக தத்துவ ஆய்விற்கான கௌரவ முனைவர் பட்டதை வழங்கியது. மல்லையா இருவரை திருமணம் புரிந்துகொண்டார். இவருடைய முதல் மனைவி சமீரா மற்றும் இவர்களுக்கு சித்தார்த்தா விஜய் மல்லையா என்ற ஒரு மகன் இருக்கிறார். அதற்குப் பிறகு, இவர் ரேகாவை மணந்து லீனா மல்லையா, தான்யா மல்லையா என்ற இரு மகள்கள் உள்ளனர்.

பிஸ்னஸ் மேக்னட்

1984ல் யுனைட்டட் ப்ரெவெரீஸ் குழுமத்தின் தலைமை பொறுப்பை ஏற்றுக் கொண்டார். அன்றிலிருந்து 60 நிறுவனங்களுக்கும் மேற்பட்ட சர்வதேச அளவிலான பல வணிக அமைப்புகளைக் கொண்டதாக இக்குழு வளர்ச்சியடைந்துள்ளது.

1998-1999 ஆம் ஆண்டு காலத்தில் இந்நிறுவனங்களின் ஆண்டு வருமானம் 63.9% வளர்ச்சியடைந்து 11.2 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உயர்ந்தது. இக்குழுவின் கவனம் வணிக மையப் பகுதிகளாகத் திகழும் மது பானங்கள், உயிர் அறிவியல்கள், பொறியியல், விவசாயம் மற்றும் வேதிப்பொருள்கள், தகவல் தொழில்நுட்பம், விமானம் வடிவமைத்தல் ஆகியவற்றைச் சூழ்ந்து இருந்தது.

பாரம்பரியமிக்க மதுபானமான மேக்டோவேள் இவருக்குச் சொந்தமானதாகும்.

மே 2007 ல் யுனைட்டட் ப்ரெவெரீஸ் குழுமம் சுமார் 6000 கோடி இந்திய ரூபாய்க்கு வய்ட் மற்றும் மக்கேவால் உருவாக்கப்பட்ட ஸ்காட்ச் விஸ்கியினை கையகப்படுத்துவதாக அறிவித்தது.

2005 ல் இவர் சாண்ட்பைபர் மற்றும் ஜிங்காரோ என்னும் பெயர் கொண்ட இரண்டு முன்னோடி பீர்வகைகளைச் சொந்தமாக கொண்டிருந்த மில்லேனியம் வடிப்பாலைகள் நிறுவனத்தினை (முன்பு இநேர்டியா தொழில் நிறுவனம் என்றழைக்கப்பட்டது) தனதாக்கிக் கொண்டார்.

கிங் பிஷர்

2005 ல் கிங் பிஷர் விமான நிறுவனம் விஜய் மல்லையா நிறுவினார். தற்போது, இவ்விமான உள்நாட்டு மற்றும் பன்னாட்டு விமான சேவை மூலம் 32 நகரங்களை இணைக்கிறது. இந்நிறுவனம் இந்தியாவின் குறைந்த விலை விமான சேவை அளித்து வந்த ஏர் டெக்கானின் 26% உரிமை பங்குகளை கிங் பிஷர் விமான நிறுவனம் பெற்றது.

பின்னர் முழுவதுமாக பெற்று தன்னுடைய கிங் பிஷர் ஃபிளீட் விமானங்களோடு ஒருங்கிணைத்தார், கிங் பிஷர் ரெட் என அதற்கு மறுபெயரிட்டார். விஜய் மல்லையா மற்றும் ஜெட் ஏர்வேஸ் தலைவர் நரேஷ் கோயல் ஆகியோர் 13 அக்டோபர் 2008 இல் நடந்த மாரத்தான் சந்திப்பிற்கு பிறகு தங்கள் கூட்டு உடன்படிக்கையை வெளியிட்டனர்.

இருப்பினும் கிங் பிஷர் விமான நிறுவனம் கச்சா எண்ணைய் விலையேற்றத்திலும் நிறுவனத்தின் சீரற்ற பொருளாதார தன்மையாலும் இழுத்து மூடப்பட்டது.

விஜய் மல்லையாவின் சொந்த விமானம் ஒன்று, மும்பையில் உள்ள காயிலாங்கடையில் உடைக்கப்பட்டு எடைக்கு போடப்பட்டதாகவும் செய்திகள் உள்ளன.

ஸ்போர்ட்ஸ் லவ்வர்

2007 ல், நெதர்லாந்துலிருந்து 88 மில்லியன் ஐரோப்பிய டாலர்களுக்கு மல்லையா மற்றும் மோல் குடும்பம் கார் பந்தயத்தில் ஸ்பயிகர் எப்1 குழுவை வாங்கினார்கள்.

2008 ஆம் ஆண்டிலிருந்து இக்குழுவானது தன்னுடைய பெயரை போர்ஸ் இந்திய எப்1 என்று மாற்றியது. விஜய் மல்லையா, ஜான் மோல் மற்றும் மிச்சில் மோல் ஆகியோர் அக்குழுவின் உரிமையாளர்களாக மாறிய பிறகு அக்குழுவின் காருக்கு விஜேஎம்-01 என்ற பெயரினைச் சூட்டினார்கள்.

மேலும் மல்லையா எப்ஐஏ வேர்ல்ட் மோட்டார் ஸ்போர்ட் கவுன்சிலில் இந்திய பிரதிநிதியாகக் கலந்து கொண்டு 2009 முதல் 2013 வரை தனக்கென்று ஒரு இருக்கையை வைத்துக் கொண்டிருக்கிறார்.

அதேபோல் மல்லையாவின் யுனைட்டட் ப்ரெவெரீஸ் நிறுவனம் கிழக்கு வங்காளம் மற்றும் கல்கத்தாவிலுள்ள மொஹுன் பாகன் கால்பந்தாட்ட சங்கங்களுக்கு ஆதரவளித்து வருகிறது.

மேலும் இவர் பெர்னி ஏக்லேஸ்டன், ப்லவியோ ப்ரியாட்டோர் மற்றும் லக்ஷ்மி மிட்டல் போன்ற தொழில் நிறுவனங்களின் கூட்டமைப்பின் பகுதியாக விளங்கிய, குயின்ஸ் பார்க் ரேன்ஜெர்ஸ் எப்சியினை முயன்று பெற்றுள்ளார்.

மல்லையாவின் கொடிகட்டிப் பறக்கும் யூபி குழு இந்தியன் பிரிமியர் லீக்கில் உள்ள ராயல் சேலன்ஜர்ஸ் பெங்களூர் குழுவை சொந்தமாகக் கொண்டுள்ளது. இவர் இந்த குழுவிற்காக US$111.6 மில்லியன்களை கொடுத்து ஏலத்தில் வெற்றி பெற்றார்.

ராயல் சாலேன்ஜெர்ஸ் பெங்களூர் குழுவில் ராகுல் டிராவிட், அனில் கும்ப்ளே, கெவின் பீட்டர்சென், ஜச்குஸ் கல்லிஸ், ஷிவ்னரைன் சந்தேர்பால், ராபின் உத்தப்பா, மார்க் பௌசெர், சுனில் ஜோஷி, மிஸ்பாஹ்-உல்-ஹக், ரோஸ் டேலர் மற்றும் டேல் ஸ்டெயின் ஆகிய வீரர்கள் விளையாடி உள்ளார்கள்.

தற்பொழுது விராட் கோலி தலைமையில் பெங்களூர் ராயல் சாலன்ஜெரை்ஸ் குழு இருந்தாலும் அதன் உரிமையாளராக மல்லையா இருக்கிறாரா ? என்ற சந்தேகமும் இருக்கிறது.

மேலும் மல்லையா குதிரைப் பந்தயத்தில் தான் கொண்ட விருப்பம் காரணமாக யுனைடட் ரேசிங் மற்றும் ப்ளட்ஸ்டாக் ப்ரீடர்ஸ் ( யூஆர்பிபி )- ஐ சொந்தமாகக் கொண்டுள்ளார்.

கர்நாடக அரசு இவரிடமிருந்து குதிரைகள் ஸ்டட் பண்ணையை ( யூஆர்பிபி) குத்தகையின் கீழ் பெற்று நடத்துகிறது.

அரசியல் வாழ்க்கை

2000-ல் அரசியலிலும் காலடி எடுத்து வைத்தார் மல்லையா. சுப்பிரமணியன் சுவாமியுடன் இணைந்து ஜனதா கட்சியில் செயல்பட்டார்.

இவர்கள் தலைமையிலான ஜனதா கட்சி அப்போது கர்நாடக சட்டசபை தேர்தலில் 224 தொகுதிகளிலும் போட்டியிட்டு, ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறமுடியாமல் தோல்வி அடைந்தது.

2 முறை மாநிலங்களவை உறுப்பினராகவும் பதவி வகித்தார்.

ஏல கொள்முதல்கள்

இந்தியாவின் சிறந்த கலாச்சார மதிப்பைக் கொண்டிருக்கும் பொருள்களின் ஏலத்தில் விஜய் மல்லையா பாராட்டும் விதமாக ஏலம் கோரியது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2004 ஆம் ஆண்டு லண்டன் – ல் நடைபெற்ற ஒரு ஏலத்தில் திப்பு சுல்தானின் வாளிற்காக £175,000 க்கு வெற்றிகரமான ஏல கோரிக்கை விடுத்து இவர் தனக்கென ஒரு இடத்தை பிடித்துக் கொண்டார்.

அந்த சமயம் இந்திய ஊடகங்கள் மல்லையாவை புகழ்ந்து தள்ளின. மார்ச் 2009 ஆம் ஆண்டு, நியூயார்க்கில் நடைபெற்ற ஏலத்தில் மகாத்மா காந்திக்கு சொந்தமான பொருள்களுக்காக மல்லையா 1.8 அமெரிக்க டாலர்களுக்கு வெற்றிகரமாக ஏலம் கோரினார், முதலில் இந்த ஏலம் இந்தியாவில் அமளி ஏற்படுவதற்கு காரணமாக அமைந்தது மேலும் உடன்படிக்கைகளின் கீழ் செல்வதிலிருந்து தடுப்பதில் அரசு கலைத்து தோல்வியுற்றது.

வழக்கு

இந்தியாவில் பல வங்கிகளில் சுமார் ரூ.9,000 கோடியை கடனாக பெற்று ஏய்ப்பு செய்ததாக இவர் மீது அமலாக்கப்பிரிவு மற்றும் நடுவண் புலனாய்வுச் செயலகம் வழக்கு பதிவு செய்துள்ளது. இவர் லண்டனுக்கு தப்பிச் சென்றதால் இவரை தேடப்படும் குற்றவாளியாக “உச்சநீதிமன்றம்” அறிவித்தது.
இருப்பினும், இரட்டை குடியுரிமை வைத்திருக்கும் மல்லையா, லண்டனில் நிம்மதியாக வாழ்கிறார்.