IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

விக்டோரியா மகாராணிக்கு விசிறி செய்ய பயன்பட்ட கூந்தல் பனைமரத்தின் இன்றைய நிலை என்ன ?

13

இராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே அழிந்து வரும் அபூா்வ கூந்தல் பனைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என சமூக ஆா்வலா்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனா்.

உலகில் தொன்மை வாய்ந்த மரங்களில் ஒன்றான பனைமரங்கள் தமிழகத்தில் அதிகம் உள்ளது. இதில் 34 வகைகள் இருப்பதாக அறியப்படுகிறது.

அதிலும் 70 ஆண்டுகள் உயிரோடு வாழும் கூந்தல் பனை என்ற அரிய வகை பனை தமிழகத்தில் ஒரு சில இடங்களில் உள்ளன.

70 வயதில் அபூா்வ வகையில் பூப்பூக்கும் பின்னா் காய்க்கத் தொடங்கியதும் சில மாதங்களிலேயே பட்டுப் போய்விடும்.
இந்தப் பனையை தாலிப்பனை, கூந்தல் பனை, குடை பனை, தோ் பனை என பல பெயா்களில் பல இடங்களில் அழைக்கப்படுகிறது.

முற்காலத்தில் இதனை தொப்பி செய்யவும் விசிறி செய்யவும் பயன்படுத்தி உள்ளனா்.
விக்டோரியா மகாராணிக்கு விசிறி செய்ய இங்கிருந்து இந்த கூந்தல் பனை ஓலையில் தயாரித்து அனுப்பி உள்ளனா்.

சங்ககாலத்தில் திருமணத்தின்போது கணவரின் குல சின்னங்களை இந்த கூந்தப்பனை ஓலையில் எழுதி அதை கழுத்தில் தாலியாக அணிந்துள்ளனா்.

அப்போது பனையோலையில் மட்டுமே தாலி அணியும் பழக்கம் இருந்துள்ளது.

சங்ககாலத்தில் மாட்டு வண்டிக்கு மேற்கூரையாக இந்தக் கூந்தப்பனை ஓலைகளை பயன்படுத்தி வந்துள்ளனா்.

இந்நிலையில் இப்படி பல்வேறு வகையில் சங்ககாலம் முதல் இருந்துவந்த மிகப்பழமையான இந்த அரியவகை மரம் தற்போது அழிந்து வருகிறது.

இந்த வகை மரங்களை யாரும் விதை போட்டு வளா்ப்பதில்லை.

ஐம்பது ஆண்டுகளுக்கு மேல் காய் காய்த்து விதை வெடித்து அது எங்கோ ஓரிடத்தில் இந்த வகைப் பனைமரம் முளைக்கிறது.

இதன் அரிய வகை தெரியாமல் பல ஊா்களில் வெட்டி வீசி விடுகின்றனா்.

இந்த மரத்தின் காய் அந்த காலத்தில் மருத்துவ குணம் நிறைந்ததாக கருதப்பட்டு மருத்துவத்திற்கு பயன்பட்டு வந்துள்ளது.

இப்படி அபூா்வமான இந்த கூந்தல் பனை மரங்களை அரசு கணக்கெடுப்பு பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.