IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

வேப்பம்பூ கறிவேப்பிலை சாதம்

168

 

தேவையான பொருட்கள் :

வேப்பம்பூ (காய்ந்தது) – அரை கப், வடித்து ஆறவைத்த சாதம் – 2 கப், கறிவேப்பிலை – அரை கப், கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு – தலா 2 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 4, எள் – 2 டீஸ்பூன், சீரகம், மல்லி – தலா அரை டீஸ்பூன், காய்ந்த சுண்டைக்காய் – 10, நெய் – 2 டீஸ்பூன், உப்பு – தேவைக்கேற்ப.

செய்முறை :

வாணலியில் நெய்விட்டு கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு, காய்ந்த மிளகாய், எள், சீரகம், மல்லி, ஆகியவற்றை வறுத்து தனியாக வைக்கவும். பிறகு அதே வாணலியில் கறிவேப்பிலை, சுண்டைக்காய், வேப்பம் பூ சேர்த்து வறுத்துக்கொள்ளவும். மிக்ஸியில் முதலில் கறிவேப்பிலை, சுண்டைக்காய், வேப்பம்பூவைப் பொடி செய்துகொள்ளவும். பின்பு அதிலேயே வறுத்த கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு, காய்ந்த மிளகாய், எள், சீரகம், மல்லி, உப்பு சேர்த்து கொரகொரப்பாகப் பொடி செய்யவும். ஆறிய சாதத்தில் நெய்விட்டு இந்தப் பொடியைக் கலக்கவும். சுவையான வேப்பம்பூ கறிவேப்பிலை சாதம் தயார்.

சிறிப்பு :
இது பித்தம் நீக்கும், பசியைத் தூண்டும் சக்திகொண்டது.

#veppampoo #kariveppillai #rice