IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

காதலனை தாக்கிவிட்டு இளம்பெண் பாலியல் பலாத்காரம்

128

 

காதலனை தாக்கிவிட்டு இளம் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு தப்பி சென்ற மூன்று மர்ம நபர்களை போலீசார் தேடிவருகின்றனர்.

வேலூர் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 24 வயது இளம் பெண் இவர் ஒரு பிரபலமான துணிக்கடையில் வேலைப்பார்த்து வந்தார். அதே கடையில், காட்பாடியை சேர்ந்த வாலிபர் ஒருவரும் வேலை செய்து வந்தார். நண்பர்களாக பலகிவந்த இருவரும் பின்னர் காதலித்து வந்தனர்.

இந்நிலையில் சம்பவத்தன்று இருவரும் இரவு வேலை முடிந்ததும் வேலூர் கோட்டை வெளி பூங்காவிற்கு சென்றனர். அங்கு இருவரும் பேசிக்கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த 3 மர்ம நபர்கள் இருவரையும் கத்தியால் மிரட்டி அந்த பெண்ணிடம் இருந்த நகை, போன், பணம் ஆகியவற்றை பறித்தனர். பின்னர் காதலனை சரமாரியாக தாக்கினர். பின்னர் அந்த 3 பேர் கொண்ட மர்ம கும்பல் அந்த பெண்ணை பலாத்காரம் செய்தனர். அந்த பெண் கத்தி அலறினாள். ஆனால் ஒதுக்குப்புறமான பகுதி என்பதால் சத்தம் வெளியே கேட்கவில்லை.

Related Posts
1 of 4

சம்பவ இடத்தில் இருந்து தப்பித்து வெளியே ஓடிவந்த காதலன் வேலூர் வடக்கு போலீசில் தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போலீசார் அந்த பெண்ணை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் போலீசார் விசாரணை நடத்தினர். மேலும் சம்பவ இடத்தில் குற்றவாளிகள் வீசிச் சென்ற பொருட்களை சேகரித்தனர்.

இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வந்தநிலையில் சந்தேகத்தின் பேரில் 2 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்திவருகின்ரனர்.

#velur #Rape #case