10.1 C
Munich
Monday, October 3, 2022

இந்தியாவிலேயே அகழியுடன் காணப்படும் வேலூர் கோட்டை வரலாறு

Must read

தமிழ்நாடு சுற்றுலா தளங்களில் முக்கியமான ஒன்று வேலூர் கோட்டை ஆகும். இந்த வேலூர் கோட்டையானது 16ம் நூற்றாண்டில் விஜயநகர பேரசசரால் கட்டப்பட்டது. இதை கட்டியவரின் பெயர் சின்னபூமி நாயக்கர்.

இவருடைய காலத்தில் வேலூர் கோட்டை முக்கிய பங்கு வகித்துள்ளது. தற்போதைய காலகட்டத்திலும் வேலூர் கோட்டையானது முக்கிய அடையாளமாக பார்க்கப்படுகிறது.

இந்த வேலூர் கோட்டை முழுக்க முழுக்க கருங்கற்களால் கட்டப்பட்டது. மொத்தம் 133 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது. இதன் சிறப்பு பெரிய மதில் சுவர்களும் அங்காங்கே காணப்படும் அகழிகளும் தான்.

வேலூர் கோட்டையே முதன்முதலில் பார்ப்பவர்கள் ஏதோ ஏரிகளுக்கு நடுவில் கோட்டை இருப்பதாக நினைப்பார்கள். ஆனால் அது உண்மையில்லை. இந்த கோட்டையே சுற்றியிருப்பது ஒரு அகழி.

191 அடி அகலமும் 29 அடி ஆழமும் இருக்கும் இந்த அகழி கோட்டையுடன் சேர்த்து பார்ப்பது அழகாக காணப்படும். குறிப்பாக இரவு நேரத்தில் மின்விளக்குகளுடன் பார்ப்பது மேலும் அழகுடன் ஜொலிக்கும்.

இந்தியாவிலேயே அகழியுடன் காணப்படும் ஒரே கோட்டை இந்த வேலூர் கோட்டை மட்டுமே. இந்த கோட்டையே சுற்றி மூன்று பக்கம் தண்ணீரும் ஒரு பக்கம், அதாவது கிழக்கு திசை மட்டும் வாசல் கதவு இருப்பதாக வடிவமைத்து கட்டப்பட்டுள்ளது. இது எதிரிகள் யாரும் உள்ளே ஊடுருவிட கூடாது என்பதற்காக கட்டப்பட்டுள்ளதாம்.

வேலூர் கோட்டையை 17ம் நூற்றாண்டில் பிஜப்புர் சுல்தான் என்பவர் கைப்பற்றினார். ஆனால் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் அவரே வைத்திருக்காமல் பிரிட்டிஷ் அரசாங்கத்திடம் இலவசமாக ஒப்படைத்துள்ளார்.

வேலூர் கோட்டை பிரிட்டிஷ் அரசாங்கத்திடம் சென்றதும், திப்பு சுல்தானிடம் சண்டையிட்டனர். அந்த சண்டையில் திப்பு சுல்தானின் பையன்களை கைது செய்த ஆங்கிவேயர்கள் வேலூர் கோட்டையில் அடைத்தனர். அதாவது வேலூர் கோட்டையை சிறைச்சாலையாக மாற்றிவிட்டனர்.

இந்தியாவின் சுதந்திர போராட்டம் ஆரம்பிக்க முக்கிய காரணமே இந்த வேலூர் கோட்டை தான். இங்கு நடந்த பல விஷயங்கள் இந்தியாவில் பல இடங்களில் சுதந்திர போராட்டம் வெடிக்க காரணமாக இருந்துள்ளது.

1806ம் ஆண்டில் வேலூர் கோட்டையில் பணியாற்றிய சிப்பாய்கள் அனைவரும் மிகப்பெரிய போராட்டம் ஒன்றை வெடிக்க வைத்தனர். அந்த போராட்டம் தான் வேலூர் சிப்பாய் கழகம் என்ற பெயரில் மிகவும் பிரபலமாகி சுதந்திர போராட்டத்திற்கு ஒரு பெரிய வித்தாக அமைந்தது.

வேலூர் கோட்டையில் மிகவும் சிறப்பான இடம் ஒன்றுதான் ஜலகண்டேஸ்வர கோவில். 1566ம் ஆண்டு பொம்மு நாயக்கர் என்றவர் இந்த கோவிலை கட்டியுள்ளார். அதன் பழமை இன்றும் மாறாமல் அப்படியே பாதுகாத்து வருகின்றனர்.

வேலூர் கோட்டையை சிறிது காலம் திப்பு சுல்தான் ஆட்சி செய்து வந்தார். அந்த காலகட்டத்தில் கோட்டைக்குள்ளே தனது குடும்பத்தார்கள் தொழுகை நடத்துவதற்காக ஒரு மசூதியை கட்டியுள்ளார். கிட்டத்தட்ட 2000 பேர் ஒரே இடத்தில் தொழுகை செய்யும்படியே மிகப்பெரிய மசூதியை கட்டியுள்ளார்.

வேலூர் கோட்டை பிரிட்டிஷ் அரசாங்கத்திடம் சென்ற பிறகு அங்கு பணிபுரிந்த போர் வீரர்கள் மற்றும் அலுவலகர்கள் தாங்கள் பிரார்த்தனை செய்ய ஒரு சர்ச் வேண்டும் என்பதற்காக 1846ம் ஆண்டில் அங்கு ஒரு சர்ச் கட்டப்பட்டுள்ளது. அதற்கு பெயர் செயின்ட் ஜான்ஸ் சர்ச். இன்றும் வேலூர் கோட்டைக்குள்ளே அந்த சர்ச் உள்ளது.

வேலூர் கோட்டைக்குள் ஒரு மியூசியம் உள்ளது. அந்த காலகட்டத்தில் இருந்த ராஜாக்கள் மற்றும் அவர்கள் பயன்படுத்திய உடை, காயின்கள் உட்பட எல்லாவிதமான பொருட்களும் அங்கு காணப்படும். இன்றும் அங்கு போய் பார்த்து ரசிக்கலாம்.

- Advertisement -spot_img

More articles

- Advertisement -spot_img

Latest article