IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

வாழைப்பூ பருப்பு உசிலி

46

தேவையான பொருட்கள் :

ஆய்ந்து நறுக்கிய வாழைப்பூ – 2 கப், கடலைப்பருப்பு – 100 கிராம், துவரம்பருப்பு – ஒரு கைப்பிடி அளவு, காய்ந்த மிளகாய் – 6, மல்லி – ஒரு டீஸ்பூன், பெருங்காயம் – சிறிது துண்டு, மஞ்சள் தூள் – சிறிதளவு, எண்ணெய் – 4 டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

தாளிக்க :

கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு, கறிவேப்பிலை, எண்ணெய் – சிறிதளவு.

செய்முறை :

கடலைப்பருப்பு, துவரம் பருப்பு, இரண்டையும் 2 மணி நேரம் ஊறவைத்து அத்துடன் காய்ந்த மிளகாய், மல்லி, சிறிதளவு உப்பு, பெருங்காயம் சேர்த்து மிக்ஸியில் கொரகொரப்பாக அரைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு சூடாக்கி அதில் நறுக்கிய வாழைப்பூ, சிறிதளவு உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து வதக்கி தனியாக வைக்கவும். அரைத்த பருப்புக் கலவையை சிறிய உருண்டைகளாகப் பிடித்து ஆவியில் 10 நிமிடங்கள் வேகவைத்து உதிர்த்துக் கொள்ளவும்.

கடாயில் எண்ணெய்விட்டு கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு, கறிவேப்பிலை தாளிக்கவும். இதனுடன் வேகவைத்து சேர்த்துப் புரட்டியெடுக்கவும். சுவையான வாழைப்பூ உசிலி தயார்.

குறிப்பு :

அரைத்த பருப்புக் கலவையை ஆவியில் வேகவைக்காமல் எண்ணெயில் வதக்கி எடுத்தாலும் சுவையாக இருக்கும்.

#vazhaipoo #paruppu #usilli