IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

வாழைப்பூப் பக்கோடா காரக்குழம்பு

67

 

தேவையான பொருட்கள் :

வாழைப்பூப் பக்கோடா – ஒரு கப், புளிக்கரைசல் – ஒரு கப், நறுக்கிய வெங்காயம், தக்காளி – தலா ஒரு கப், மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன், மஞ்சள் தூள் – ஒரு டீஸ்பூன், கடுகு – சிறிதளவு, வெந்தயம் – ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை – ஓர் ஆர்க்கு, உப்பு – தேவைக்கேற்ப, நல்லெண்ணெய் – 50கிராம்,

அரைக்க :

தேங்காய் – ஒரு துண்டு, கசகசா – 2 டீஸ்பூன், பொட்டுக்கடலை – 2 டீஸ்பூன்.

செய்முறை :

அரைக்கக் கொடுத்துள்ளவற்றை சிறிதளவு தண்ணீர் சேர்த்து விழுதாக அரைக்கவும். வாணலியில் எண்ணெய்விட்டு கடுகு, வெந்தயம், கறிவேப்பிலை ஹாளிக்கவும், அதில் நறுக்கிய வெங்காயம், தக்காளி, உப்பு சேர்த்து வதக்கி புளிக்கரைசல், மிளகாய்த்தூள், மஞ்சள்தூள் சேர்த்துக் கொதிக்கவைக்கவும். நன்கு கொதித்தவுடன் அரைத்த தேங்காய் – கசகசா – பொட்டுக்கடலை விழுதைச் சேர்த்து மேலும் நன்றாகக் கொதிக்கவிட்டு தயாரித்த பக்கோடாவைச் சேர்த்து இறக்கவும். சுவையான பக்கோடா காரக்குழம்பு தயார்.

#vazhaipoo #pakkoda #karakulambu