வர்மோரா கிரானிடோ 2 ஆலைகள் தொடங்க ரூ. 300 கோடி முதலீடு

Get real time updates directly on you device, subscribe now.

இந்தியாவின் முன்னணி டைல்ஸ் மற்றும் பாத்வேர் பிராண்டுகளில் ஒன்றான வர்மோரா கிரானிடோ பிரைவேட் லிமிடெட், குஜராத்தின் மோர்பியில் இரண்டு அதிநவீன உயர் தொழில்நுட்ப ஆலைகளை அமைக்கிறது. சுமார் ரூ. 300 கோடி செலவில் அமைக்கப்படும் இந்த ஆலைகளில் பெரிய வடிவ ஜி.வி.டி ஓடுகளுள் ஒரு நாளைக்கு 35,000 சதுர மீட்டரில் தயாரிக்கப்படும். ஏப்ரல் 2021 க்குள் ஆலைகள் முழு வணிக நடவடிக்கைகளுக்கு ஏற்றதாக இருக்கும் என்று நிறுவனம் எதிர்பார்க்கிறது, மேலும் 1,200 நேரடி மற்றும் மறைமுக வேலை வாய்ப்புகளை உருவாக்கும். 25 ஆண்டுகால கண்டுபிடிப்பு, வடிவமைப்பு மற்றும் தொழில்நுட்பத்தை கொண்டாடும் இந்நிறுவனம் அடுத்த 2-3 ஆண்டுகளில் 1,600 கோடி வருவாய் ஈட்ட திட்டமிட்டுள்ளது.

குஜராத்தின் காந்திநகரில் அக்டோபர் 27 ஆம் தேதி குஜராத்  முதலமைச்சர் ஸ்ரீ விஜய்பாய் ரூபானியின் கைகளால் புதிய ஆலைகளின் மெய்நிகர் அடிக்கல் நாட்டு விழா நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் குஜராத் தொழிற்சாலைகள் மற்றும் சுரங்க கூடுதல் தலைமைச் செயலாளர் எம்.கே.தாஸ் மற்றும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பங்கேற்றனர்.

இந்த நிகழ்வில் பேசிய வர்மோரா குழுமத்தின் தலைவர் பவேஷ் வர்மோரா கூறுகையில், “நம்பகத்தன்மை, புதுமை, தர உணர்வு, வடிவமைப்பு மற்றும் தொழில்நுட்பம் ஆகியவற்றில் நம்பிக்கை கொண்ட வர்மோரா தனக்கென ஒரு வலுவான பிராண்ட் அடையாளத்தை உருவாக்கியுள்ளது. இது உலகளவில் நன்கு அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இந்திய செராமிக் துறையில் ஒரு தலைவராக தன்னை நிலைநிறுத்திக்கொள்ள  சந்தையில் புதுமையான மற்றும் மதிப்பு கூட்டப்பட்ட தயாரிப்புகளை தொடர்ந்து அறிமுகப்படுத்துகிறது. எங்களின் இந்த விரிவாக்கம் ஏற்றுமதி சந்தையிலிருந்து அதிகரித்து வரும் தேவையை பூர்த்தி செய்வதற்கும், உள்நாட்டு சந்தைகளுக்கு சிறந்த சேவைகளை  செய்வதற்கும் உதவும்.

வர்மோரா கிரானிடோ இந்தியாவில் சிறந்த டைல்ஸ் மற்றும் பாத்வேர் பிராண்டுகளில் ஒன்றாக உள்ளது.  சுவர் மற்றும் தரைகளுக்கான டைல்ஸ், ஸ்லாப், சானிட்டரிவேர், குழாய்கள் மற்றும் சமையலறை தொட்டிகளை உற்பத்தி செய்கிறது. 11 ஆலைகளுடன், நிறுவனத்தின் நிறுவப்பட்ட உற்பத்தி திறன் ஒரு நாளைக்கு 1.1 லட்சம் சதுர மீட்டர் ஆகும்.  உள்நாட்டு சந்தையில் டீலர் மற்றும் சப்-டீலர்களுடன் சேர்த்து 7,000க்கும் அதிகமான தொடர்பு பாயிண்டுகளுடன், 250 க்கும் மேற்பட்ட பிரத்தியேக ஷோரூம்கள் மற்றும் 15 வெளிநாட்டு ஷோரூம்கள் என  சந்தையில் வலுவான இருப்பைக் கொண்டுள்ளது. நிறுவனத்தின் 2020ஆம் ஆண்டு நிதி நிலவரப்படி 1100 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் செய்துள்ளது, என்றார்.

மேலும் அவர் பேசுகையில்  “நடப்பு நிதியாண்டில் விற்பனையில் இரட்டை இலக்க வளர்ச்சியை நாங்கள் எதிர்பார்க்கிறோம். குறிப்பாக வடக்கு மற்றும் தென் அமெரிக்கா, ஐரோப்பா, ஆப்ரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளின் ஏற்றுமதி சந்தையில் வலுவான தேவை உள்ளது. உலகம் மற்றும் அமெரிக்கா முழுவதும் சீனாவிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் நிலையில் சீனாவிலிருந்து வரும் ஓடுகளுக்கு கடும் நிபந்தனை விதிக்கப்படுகிறது.  இந்திய நிறுவனங்களுக்கான மிகப்பெரிய ஏற்றுமதி திறனை நாங்கள் எதிர்பார்க்கிறோம். அடுத்த 2, 3 ஆண்டுகளில், நிறுவனம் ரூ .1,600 கோடி வருவாய் ஈட்டுவதையும், தற்போது 70 இலிருந்து 100 க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி வலையமைப்பை விரிவுபடுத்துதல் மற்றும் பிரத்யேக ஷோரூம்களை 320 க்கு மேல் உயர்த்துவதை இலக்காக நிர்ணயித்துள்ளது. “என்றார்.

வர்மோரா குழுமத்தின் நிறுவனர் ஸ்ரீ ராமன்பாய் வர்மோரா கூறுகையில், “இந்த சாதனை குறித்து நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம், பெருமிதம் கொள்கிறோம், மேலும் நிறுவனத்தின் ஒவ்வொரு பங்குதாரருக்கும் குறிப்பாக எங்கள் ஊழியர்கள், வியாபாரி-விநியோகஸ்தர் நண்பர்கள், வங்கியாளர், வணிக பங்காளிகள் மற்றும் ஆதரவளித்தோர் என கடந்த 25 ஆண்டுகளாக எங்கள் நிறுவனத்தின் வெற்றிப்பயணத்தில் இணைந்த அனைவருக்கும் நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். 1994 ஆம் ஆண்டில் மோர்பியில் உள்ள ஒரு சிறிய பிரிவில் இருந்து எங்கள் பயணத்தைத் தொடங்கிய வர்மோரா இன்று முன்னணி டைல்ஸ் மற்றும் பாத்வேர்  பிராண்டுகளில் ஒன்றாக மாறியுள்ளது”, என்றார்.

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More