IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

பிரியங்காவின் மரணத்திற்கு என்ன பதில் சொல்ல போகிறது சமூகம்? – கொதிக்கும் நடிகை வரலட்சுமி

274


தெலங்கானா மாநிலம் மகபூப் நகர் மாவட்டத்தைச் சேர்ந்த கால்நடை மருத்துவர் பிரியங்கா ரெட்டியை(26) நேற்று முன்தினம் இரவு கூட்டு பாலியல் வன்புனர்வு செய்து கொடூரமாக கொலை செய்யப்பட்டு எரித்துள்ளனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியது.

இந்த வழக்கில் சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளைக் கொண்டு, பிரியங்காவின் கொலையில் தொடர்புடைய 4 குற்றவாளிகளை போலீசார் கைது செய்துள்ளனர். கைதான குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனையாக மரணதண்டனை விதிக்க வேண்டும் என்று கோரிக்கை நாடு முழுவதும் வலுத்து வருகிறது.

இந்நிலையில் நடிகை வரலட்சுமி சரத்குமார், இதுபோன்று இன்னும் எத்தனை உயிர் தியாகங்கள் செய்த பிறகு அரசு கடுமையான நடவடிக்கை எடுக்கும்? இவரது மரணத்திற்கு நாம் அனைவருமே பொறுப்பு தான். கொடிய மிருகங்களை விட மனித மிருகங்கள் வாழும் இவ்வுலகில் நாம் வாழ்கிறோம்.

பெற்றோர்கள் தங்களது ஆண் குழந்தைகளுக்கும் பெண்களை போற்றி பாதுகாக்க வேண்டும் என்பதை அவசியம் கற்றுத்தர வேண்டும். பெண்களை பயன்படுத்திவிட்டு தூக்கி எறிய நாம் ஒன்றும் பொருள் அல்ல என டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.

மேலும் பிரியங்கா கொலை வழக்கில் கைதான குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனையாக மரணதண்டனை வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாக #Deathpenalty #மரணதண்டனை என்ற ஹேஷ்டாக்கையும் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
#Deathpenalty #மரணதண்டனை #PriyankaReddy #In4Net