தமிழக பாஜக பொதுச்செயலாளராக பொறுப்பேற்றுள்ள வானதி சீனிவாசன் வருகின்ற இடைத்தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெறும் என்று தெரிவித்துள்ளார்.
தமிழக மாநில பாஜக தலைவராக பொறுப்பில் இருந்தவர் தமிழிசை சௌந்திரராஜன். இவர் பங்குபெறும் அனைத்து நிகழ்ச்சிகளிலும் தமிழகத்தில் பாஜக அமோக வெற்றி பெறும் என்றும் தாமரை மலர்ந்தே தீரும் என்று கூறுவது தனிச்சிறப்பு. இவர் தற்போது தெலங்கானா மாநில கவர்னராக பொறுப்பேற்று உள்ளார்.
இந்நிலையில் தமிழக பாஜக பொதுச் செயலாளராக பொறுப்பேற்றுள்ள வானதி சீனிவாசன், விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி இடைத்தேர்தலில் பாஜக சார்பாக யார் போட்டியிடப் போகிறார்கள் என்றோ அல்லது ஆளும் கட்சியுடன் கூட்டணி வேட்பாளர்கள் குறித்தோ போன்ற எந்தவித தகவல்களும் அறிவிக்காத சூழ்நிலையில் வருகின்ற இடைத்தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெறும் என்று கூறி வருகிறார்.
தமிழகத்தில் பாஜக குறித்து மக்கள் மனதில் என்னவென்று தெரியாமல் தமிழிசை தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும் என்று கூறியே தெலங்கானா மாநில கவர்னராக பதிவு உயர்வு பெற்றுள்ளார். இந்நிலையில் தமிழிசை போல இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் குறித்தோ அல்லது கூட்டணி அமைக்கும் விவகாரம் குறித்தோ எந்தவொரு தகவலும் அறிவிக்காத நிலையில் பாஜக அமோக வெற்றி நிச்சயம் என்று கூறி தமிழிசை பெற்றுள்ள கவர்னர் பதவி ஆசையில் பேசி வருகிறார் என்று நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.
மேலும் வானதி சீனிவாசன் கூறுகையில் வேலூர் இடைத்தேர்தலில் தான் நூலிழையில் வெற்றியை தவற விட்டோம். இந்தமுறை இடைத் தேர்தலில் நிச்சயம் பாஜக கூட்டணி அமோக வெற்றியடையும் என்றார்.
#VanathiSrinivasan #TamilisaiSoundarrajan #BJP #In4Net