IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

வருமான வரி செலுத்த சி.எம். பயன் படுத்திய டெக்னிக்கை தெரிஞ்சுக்கிட்டா திகைச்சிப் போயிடுவீங்க!

4


அன்றாட சிறுதொழில் செய்யும் வர்த்தக மக்கள் கூட தங்களது வரிப்பணத்தை சரியாக செலுத்தி வரும் சூழ்நிலையில் அரசு சம்பளம் வாங்கும் முதல்வர் மற்றும் அமைச்சர்கள் மக்களின் வரிப் பணத்திலிருந்து வருமான வரி செலுத்திய விவகாரம் தற்போது தெரியவந்துள்ளது.


உத்திரபிரதேச மாநிலத்தில் 1981லிருந்து மாநில முதல்வர் மற்றும் அமைச்சர்களாக பதவி வகித்த அனைவரும் மக்களின் வரிப்பணத்திலிருந்தே வருமானவரி செலுத்திய விவகாரம் தற்போது தெரிய வந்துள்ளது. உ.பி.யில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ.க. ஆட்சி நடக்கிறது. 1981ல் காங்கிரஸ் தலைமையில் வி.பி.சிங் முதல்வராக இருந்தார்.


அப்போது முதல்வர் மற்றும் அமைச்சர்களாக பதவி வகித்த பலரும் ஏழைகளாக இருந்ததால், அவர்களுக்கு சலுகை அளிக்கும் விதத்தில் உ.பி.யில் ஒரு சட்டம் இயற்றப்பட்டது. இதன்படி முதல்வர் மற்றும் அமைச்சர்களுக்கான வருமான வரியை மக்கள் வரிப்பணத்திலிருந்து செலுத்தலாம் என்று இருந்தது.


இதுகுறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் கூறும்போது, உ.பி.யில் காங்கிரஸ் ஆட்சி காலங்களில் முதல்வர் மற்றும் அமைச்சர்களாக பதவி வகித்தவர்கள் அனைவரும் ஏழை குடும்பத்திலிருந்து வந்தவர்கள். அவர்களுக்கு மாத சம்பளம் மிகக்குறைவு. ஆனால் தற்போது காங்கிரஸ் அல்லாத கட்சிகள் ஆட்சிக்கு வந்ததும் முதல்வர் மற்றும் அமைச்சர்களின் சம்பளம் பலமடங்கு உயர்ந்துள்ளதாக தெரிவித்தார்.
#IncomeTax #Pay #India #In4Net


வருமான வரிவிலக்கு திட்டங்களின் முதலீடு குறித்து ஓர் ஆய்வு

இந்தச் சலுகையை பா.ஜ.க.வின் யோகி ஆதித்யநாத், கல்யாண் சிங், ராஜ்நாத் சிங், காங்கிரஸின் என்.டி.திவாரி, சமாஜ்வாதியின் முலாயம் சிங் யாதவ், அகிலேஷ் யாதவ் உட்பட அனைத்து முதல்வர்களும் மற்றும் அமைச்சர்களாக இருந்த அனைவரும் இந்த சலுகையை அனுபவித்து வந்துள்ள தகவல், தற்போது தெரியவந்துள்ளது.
#In4Net #IncomeTax #Pay #UttarPradesh