10.1 C
Munich
Monday, October 3, 2022

காய்ச்சலை துல்லியமாக கணக்கீடும் தெர்மா மீட்டர் குறித்த தகவல்கள்

Must read

தெர்மா மீட்டர் என்ற வார்த்தை பண்டைய கிரீக் நாட்டில் தான் கண்டுபிடித்துள்ளனர். கிபி 170ம் ஆண்டில் டாக்டர் கேலன் என்பவர் காய்ச்சலின் அளவை கண்டுபிடிப்பதற்காக ஒரு கண்ணாடி குடுவையில் மெர்குரியை ஊற்றி அதை உடலில் வைத்துள்ளார்.

உடல் சூற்றிற்கு ஏற்றவாறு மெர்குரியின் அளவும் அதிகரித்துள்ளது. இதை வைத்து தான் தோராயமாக ஒருவரின் உடம்பில் காய்ச்சல் எந்த அளவில் உள்ளது என்பதனை கண்டுபிடித்துள்ளார்.

1612ம் ஆண்டு இத்தாலியை சேர்ந்த சாண்டோரியோ என்ற மருது்துவர் காய்ச்சலின் அளவை குறிக்கும் ஸ்கேலை கண்டுபிடித்தார்.

அந்த ஸ்கேலை காய்ச்சல் உள்ளவரின் உடம்பில் வைத்து அந்த சூட்டோடு மெர்குரி உள்ள கண்ணாடி குடுவையில் வைத்து எடுத்தால் காய்ச்சலின் அளவிற்கு ஏற்றவாறு மெர்குரி மேலேயும் கீழேயும் இறங்கி செல்லும்.

இதை வைத்து காய்ச்சலின் அளவை தோராயமாக இவர் கண்டுபிடித்துள்ளார்.

1600ம் ஆண்டில் கலிலியோ என்ற விஞ்ஞானி தெர்மோஸ்கோப் என்ற சாதனத்தை கண்டுபிடித்தார். இதை வைத்து சூட்டை மட்டுமின்றி குளிர்ச்சியையும் எந்த அளவில் உள்ளது என்பதை கண்டுபிடிக்கலாம்.

இதற்கு முந்தைய கண்டுபிடிப்பை போன்று சிறுசிறு மாறுதல்களுடன் இந்த கண்டுபிடிப்பை கலிலியோ கண்டுபிடித்துள்ளார்.

கிரேன்ட் டியுக் ஆப் டஸ்கானி (Grand Duke of Tuscany II) என்ற விஞ்ஞானி தற்போது நடைமுறையில் பயன்படுத்துகின்ற தெர்மா மீட்டர் அமைப்பை 1654ம் ஆண்டில் கண்டுபிடித்தார்.

அதாவது ஒரு கண்ணாடி குடுவையில் ஆல்கஹாலை ஊற்றி அதை நாக்கு அடியில் வைத்தாலோ அல்லது உடம்பில் வைத்தாலோ காய்ச்சலின் அளவை காட்டும் என்பதை கண்டுபிடித்தார். ஆனால் பெரிய அளவில் பயன்பெற வில்லை.

சில வருடங்களுக்கு முன்பு பயன்படுத்தப்பட்டு வந்த கண்ணாடி தெர்மா மீட்டரை டேனியல் கேப்ரியல் ஃபேரன்ஹீட் என்ற விஞ்ஞானி 1714ம் ஆண்டில் கண்டுபிடித்துள்ளார்.

ஒரு கண்ணாடி குடுவையின் மீது அளவீடு குறிக்கப்பட்டிருக்கும். அதற்குள்ளே மெர்குரி ஊற்றப்பட்டிருக்கும் தெர்மா மீட்டரை கண்டுபிடித்துள்ளார்.

தெர்மா மீட்டரில் டிகிரி செல்சியஸ் என்ற விசயத்தை உபயோகப்படுத்தி வருகிறோம். இந்த விசயத்தை கண்டுபிடித்தவர் ஆண்டர்ஸ் செல்சியஸ். ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த இவர் 1742ம் ஆண்டில் இதை கண்டுபிடித்தார்.

சூடு மற்றும் குளிர்ச்சி ஆகிய இரண்டின் அளவை துல்லியமாக கணக்கீடும் தெர்மா மீட்டரை கண்டுபிடித்துள்ளார். அவருடைய நினைவு காரணமாகத்தான் செல்சியஸ் என்ற வார்த்தையினை பயன்படுத்தி வருகிறோம்.

தற்போது பயன்பாட்டில் இருக்கும் டிஜிட்டல் தெர்மா மீட்டருக்குள் வெப்பத்தின் அளவை கணக்கீடும் சென்சார் ஒன்று உள்ளது.

அது நமது உடலில் எந்த அளவு காய்ச்சல் உள்ளது என்பதை கண்ணாடி டிஸ்ப்ளேவில் தெளிவாக காண்பிக்கும். அதை உபயோகப்படுத்தும் முன் ஒவ்வொரு முறையும் சுத்தப்படுத்தி பயன்படுத்துவது நல்லது.

வெப்பத்தின் அளவை கணக்கீட தெர்மா மீட்டரில் ஏன் ஆல்கஹால் அல்லது மெர்குரி பயன்படுத்தப்படுவது ஏனென்றால் இந்த இரண்டு திரவங்களும் சூடோ அல்லது குளிர்ச்சியோ அதை அப்படியே உள்வாங்கி கொண்டு அதற்கு ஏற்றவாறு ரியாக்சனை அப்படியே வெளிப்படுத்தும்.

தெர்மா மீட்டர் என்ற விசயம் காய்ச்சலின் அளவை கணக்கீட மட்டுமின்றி, வானிலை அறிக்கை, விமான பயணத்தின் போது, தொழிற்சாலை மற்றும் நியூக்ளியோர் சம்பந்தமான விசயத்திலும் பயன்படுத்தி வருகின்றனர்.

தெர்மா மீட்டரை வைத்து அளவீடு எடுக்கும்போது மூன்று விசயத்தை வைத்துதான் எடுப்பார்கள். பாரன்ஹீட், செல்சியஸ் மற்றும் கெல்வின்.

பழைய பொருட்களுக்கு எப்போதும் மதிப்பு அதிகம் தான். உதாரணமாக டேனியல் பேரன்ஹீட் கண்டுபிடித்த அந்த தெர்மா மீட்டரை 2012ம் ஆண்டில் ஏலம் விட்டனர். அதை ஒருவர் ஒரு லட்சத்து ஏழாயிரத்து பதினெட்டு அமெரிக்க டாலருக்கு வாங்கியுள்ளார்.

பேரன்ஹீட்டை முதன்முதலாக கண்டுபிடித்திருந்தாலும் தற்போது வரை அதனை பயன்படுத்தி வருவது அமெரிக்கா, பஹமாஸ் மற்றும் கேய்மன் ஐலேண்ட்ஸ் ஆகிய நாடுகளில் மற்றும் பேரன்ஹீட்டை பயன்படுத்தி வருகின்றனர்.

மற்ற எல்லா நாடுகளிலும் செல்சியஸ் மட்டுமே பயன்படுத்தி வருகின்றனர்.

- Advertisement -spot_img

More articles

- Advertisement -spot_img

Latest article