IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

தடகள வீரர் உசேன் போல்ட்டிற்கு கொரேனா தொற்று உண்மையா..? அவரே வெளியிட்ட வீடியோ பதிவு

Get real time updates directly on you device, subscribe now.

மின்னல் வேக ஓட்டத்திற்கு உதாரணம் உசேன் போல்ட். இவர் ஜமைக்கா நாட்டைச் சேர்ந்தவர். இவர் ஓட்டப்பந்தயத்தில் எவராலும் மிஞ்ச முடியாத பல சாதனைகளை நிகழ்த்தியுள்ளார். தொடர்ந்து மூன்று ஒலிம்பிக் போட்டிகளில் தங்கம் வென்ற ஒரே வீரர் உசேன் போல்ட் மட்டுமே.

2017 ஆம் ஆண்டில் லண்டனில் நடைபெற்ற IAAF தடகளப்போட்டியில் உசேன் போல்ட்டை ஜஸ்டின் கேட்லின் தோற்கடித்தார். ஆனால், ஜஸ்டின் கேட்லின் வெற்றி மேடை ஏறும்முன் உசேன் போல்ட் முன் மண்டியிட்டு மரியாதை செலுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது உசேன் போல்ட்டிற்கு கொரோனா தொற்று ஏற்பட்டதாகவும், அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக சமூக வலைதளங்களில் செய்திகள் பரவி வருகின்றன.

கடந்த 4 நாட்களுக்கு முன் உசேன் போல்ட்டிற்கு பிறந்த விழாவினை குடும்பத்துடன் கொண்டாடினார். அப்போது வெளியான வீடியோவில் பலரும் மாஸ்க் அணியாமல் கலந்துகொண்டது தெரியவந்தது.

சமூக ஊடகங்களில் வைரலான வீடியோவால், உசேன் போல்ட்டுக்கு கொரோனா பாதிப்பு உள்ளதாகச் செய்தி பரவியது. இந்த நிலையில் இது உண்மையா… வதந்தியா? என்ற குழப்பமும் நிலவியது. அதனால், உசேன் போல்ட் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார்.

அதில் தனக்கு எவ்வித கொரோனா அறிகுறிகளும் இல்லை. ஆனாலும் கொரோனா டெஸ்ட் எடுத்துள்ளேன். அதன் முடிவு வரும் வரை என்னை நானே தனிமைப் படுத்திக்கொண்டுள்ளேன்’ என்பதாக அந்த வீடியோவில் குறிப்பிட்டுள்ளார். இதன்மூலம் சர்ச்சைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader