10.1 C
Munich
Monday, October 3, 2022

அப்கிராட், பர்டூ பல்கலைக்கழகத்துடன் இணைந்து 3 அதிநவீன சான்றிதழ் கல்வி திட்டங்களை அறிவிக்கிறது

Must read

சமீபத்திய வளர்ச்சி கண்ட ஆசியாவின் உயர் எட்டெக் தலைவரான அப்கிராட், Blockchain, Full stack development மற்றும் Cloud Backend Development போன்ற பிரபல தொழில்நுட்ப பாடங்களில் மூன்று சான்றிதழ் கல்வி திட்டங்களை வழங்குவதற்காக – அமெரிக்காவின் முன்னணி 10 பொதுப் பல்கலைக்கழகங்களில் ஒன்றான பர்டூ பல்கலைக்கழகத்துடன் இன்று ஒரு கூட்டாண்மையை அறிவித்துள்ளது. இந்த எட்டெக் மேஜர் உலகளாவிய பல்கலைக்கழகங்களுடனான கூட்டாண்மை மற்றும் தயாரிப்பு போர்ட்ஃபோலியோவை விரிவுபடுத்துகிறது. இது புதிய பாடத்திட்டம், தரமான கல்வி மற்றும் வேலைக்கான ஆதரவுடன் தொழில் வல்லுநர்கள் அவர்களில் துறை சார்ந்த படிப்புகளை கற்க உதவுகிறது.

யுஎஸ் நியூஸ் மற்றும் வேர்ல்ட் ரிப்போர்ட் மூலம் அமெரிக்காவின் சிறந்த 10 புதுமையான பல்கலைக்கழகங்களில் ஒன்றாக கருதப்படும் பர்டூ பல்கலைக்கழகம், அப்கிரேடுடன் இணைந்து கற்பவருக்கு ஏற்ற நேரத்தில் கற்றல் மற்றும் நேரலை வகுப்புகளின் கலவையின் மூலம் இந்தியாவின் பணியாளர்களுக்கு அவர்களின் முக்கிய தொழில்நுட்ப திறன்களை வளர்க்க உதவும். இந்த மூன்று படிப்புகள் ஒவ்வொன்றும் ஒன்பது மாதங்கள் மற்றும் மொத்தம் 1100 கற்றல் நேரத்தை உள்ளடக்கியது. Full Stack Development Certificate Program மற்றும் Cloud Backend Development Certificate Program ஆகியவை ஒவ்வொன்றும் 10 பாடத் தொகுதிகளை உள்ளடக்கி, கற்றல் அனுபவத்தை வழங்குகின்றன. Blockchain Certificate program பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாக 4 பாடத் தொகுதிகளை வழங்குகிறது.

 

பர்டூவால் அங்கீகரிக்கப்பட்ட மற்றும் அப்கிரேடால் இயக்கப்படும் பாடத்திட்டத்துடன் கூடிய இந்த ஆன்லைன் திட்டங்கள், சிறந்த-இன்-கிளாஸ் உள்ளடக்கம், முன்னணி ஆசிரியர்கள் மற்றும் தொழில் வல்லுநர்களுடன் மாஸ்டர் வகுப்புகள், 10 க்கும் மேற்பட்ட நிரலாக்க கருவிகள் மற்றும் கற்பவர்களுக்கு சிறந்த தொழில் ஆதரவை வழங்குகின்றன. ஒவ்வொரு திட்டமும் பாடங்களின் நுண்ணிய அம்சங்களை உள்ளடக்கியதாக வடிவமைக்கப்பட்டுள்ளது, பாட அறிவு மற்றும் பயன்பாட்டு திறன்களை வலுப்படுத்த அடித்தளம் முதல் மேம்பட்ட நிலை வரை கற்பிக்கிறது. Full Stack Development Program திட்டத்தின் மூலம்  Web Design, API and Microservices, DevOps,  போன்றவற்றை உள்ளடக்கிய முழு-ஸ்டாக் டெவலப்மென்ட் திறன்களில் தேர்ச்சி பெறுவதற்கான வாய்ப்பை கற்பவர்களுக்கு வழங்கும். Blockchain Certificate program திட்டம் Blockchain Fundamentals and Frameworks, Bitcoin Concepts, Blockchain Architecture, Ethereum, Hyperledger, JavaScript, NodeJS, Git மற்றும் பல கூறுகளை உள்ளடக்கிய திறன்-மேம்பாடுகளை மையமாகக் கொண்டிருக்கும். Cloud Backend Development Certificate Program ஆனது, Cloud, MySQL-Amazon RDS, NoSQL Database-MongoDB, Backend Development, Design and Development of a Microservices based web application backend, Testing, Debugging, and Containerization உள்ளிட்ட பாடங்களை வழங்கி கற்றுக்கொள்பவர்களை மேம்படுத்தும்.

அப்கிராடின் இணை நிறுவனர் பல்குன் கொம்பள்ளி கருத்துத் தெரிவிக்கையில், “சமீபத்திய தொழில்நுட்பங்கள் வேலையில் ஆதிக்கம் செலுத்தும் ஒரு காலகட்டத்தில் நாம் செயல்படுகிறோம், மேலும் வரவிருக்கும் சந்தை சவால்களை எதிர்கொள்வதற்கான அதிநவீன திறன்களை அறிய நாம் நிபுணர்களை ஊக்குவிக்கிறோம். நிறுவனங்கள் வளர்ந்து வரும் நிரலாக்க மொழிகள் மற்றும் அதிகபட்ச வணிக வளர்ச்சிக்கு தொழில்நுட்ப நுணுக்கங்களை நன்கு அறிந்திருக்கும் டிஜிட்டல் ஆர்வமுள்ள தொழில்நுட்பத் திறமைகளை தொடர்ந்து தேடுகிறார்கள். எனவே, எலைட் பர்டூ பல்கலைக்கழகத்துடன் இணைந்து புதிதாகத் தொடங்கப்பட்டுள்ள இத்திட்டம், மில்லியன் கணக்கானவர்களுக்கு தரம் மற்றும் பயன் வாய்ந்த கற்றலை வழங்கி அவர்களை ஊக்குவிக்கும் எனத் தெரிவித்தார்.

 

கூட்டாண்மை மூலம், வேகமாக வளர்ந்து வரும் தொழில்நுட்ப வளர்ச்சியில் திறமையை மேம்படுத்த விரும்பும் நிறுவனங்கள் மற்றும் அவற்றின் குழுக்களுக்கு கற்பிப்பதை அப்கிராட் நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்தத் திட்டங்களுக்கான குறைந்தபட்ச கல்விதகுதி உயர்நிலைப் பள்ளி டிப்ளமோ அல்லது அதற்கு சமமானதாகும். C++/Java/Javascript/Python, Data Structures மற்றும் Algorithms அனுபவத்துடன் இளங்கலைப் பட்டப்படிப்பை நிறைவு செய்பவர்களை அதிகமாக  ஊக்குவிக்கிறது.

இந்த ஆண்டின் தொடக்கத்தில், அப்கிராட் நியூயார்க் நகரத்தை தளமாகக் கொண்ட ஒரு சிறந்த தொழில்நுட்ப கல்வி வழங்குநரான ஃபுல்ஸ்டாக் அகாடமியுடன் கூட்டு சேர்ந்து, Cyber Security மற்றும் Data Analytics ஆகியவற்றில் இரண்டு புதிய கால்டெக் சான்றிதழ் திட்டங்களை அறிமுகப்படுத்தியது. இந்த திட்டம் சிறு தொழில்நுட்ப அறிவு அல்லது அது பற்றி அறியாதவர்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த கல்வி திட்டங்களை கற்ற பிறகு அதன் பங்கேற்பாளர்கள் இந்தியா மற்றும் அதற்கு அப்பால் அதிகளவில் தேவையுள்ள தொழில்நுட்பம் சார்ந்த வேலைகளில் அதிக ஊதியத்துடன் பணியமறும் வாய்ப்பை வழங்கும்.  எனவே, அப்கிராட் படிப்படியாக அதன் தயாரிப்பு போர்ட்ஃபோலியோவில் சமீபத்திய தொழில்துறை தொடர்பான தொழில்நுட்ப திறன் திட்டங்களின் முழு வரம்பையும் சேர்த்து, உலகளாவிய அனைவருக்கு கற்றலை வழங்குகிறது.

மேலும் பேசிய பால்குன், “இந்த தொற்றுநோயால் ஏற்பட்ட மாற்றங்களில் க்ளவுட் சார்ந்த வேலைகளுக்கான தேவை அதிகரிப்பும் ஒன்றாகும். இது நாட்டில் திறன் இடைவெளியை விரிவுபடுத்தியுள்ளது. எனவே, சரியான திட்டங்கள் மற்றும் வலுவான பல்கலைக்கழக நெட்வொர்க்குடன், நாட்டில் மிகப்பெரிய தொழில்நுட்ப-திட்ட போர்ட்ஃபோலியோவை உருவாக்க உள்ளோம். இது அனைவராலும் அணுகக்கூடியது மட்டுமல்லாமல் மிகவும் செலவு குறைந்ததாக இருக்கும் என்றார்.

- Advertisement -spot_img

More articles

- Advertisement -spot_img

Latest article