IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

மேடையில் நடனத்தை பாதியில் நிறுத்தியதால் இளம்பெண் மீது துப்பாக்கிச்சூடு

159


திருமண விழாவில் இளம்பெண் ஒருவர் குழுவினருடன் நடனமாடிக் கொண்டிருக்கும் போது நடனத்தை பாதியில் நிறுத்தியதால் அந்த பெண் மீது துப்பாக்கி சூடு நடத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்திர பிரதேச மாநிலத்தின் சித்ரகூட் மாவட்டத்தில் நடந்த திருமண நிகழ்வில் இளம்பெண் ஒருவர் தனது குழுவினருடன் நடனமாடிக் கொண்டிருந்தார். அப்போது அந்த பெண் மூச்சு வாங்குவதுபோல் ஒரு நிமிடம் நடனத்தை நிறுத்தியுள்ளார். அந்த வரிசையில் நடனத்தை பார்த்துக் கொண்டிருந்தவர்களில் ஒருவர் நடனத்தை நிறுத்தாமல் தொடர்ந்து ஆட வேண்டும் இல்லையெனில் துப்பாக்கியால் சுட்டுவிடுவேன் என மிரட்டியுள்ளார்.

அதைக்கேட்டு அருகிலிருந்த மற்றொரு நபர் துப்பாக்கியால் சுடச் சொல்லி கத்தியுள்ளார். உடனே அடுத்த நொடியில் மதுபோதையில் இருந்த நபர் துப்பாக்கியால் அந்த பெண் முகத்தில் சுட, அந்த பெண் மேடையிலேயே சரிந்து கீழே விழுந்தார்.

முகத்தில் காயமடைந்த அந்த பெண் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் துப்பாக்கியால் சுட்ட நபரை தேடி வருகின்றனர்.

திருமண விழாவில் பலரின் முன்பு அந்த இளம்பெண்ணை சுட்ட வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஏற்கனவே உத்திர பிரதேசத்தில் பாலியல் வன்புனர்வால் பாதிக்கப்பட்ட பெண் சாட்சி சொல்ல நீதிமன்றம் செல்லும் வழியில் பெட்ரோல் வீசிய சம்பவம் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியுள்ள நிலையில் இந்த சம்பவம் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.