IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

பீகாரில் மத்திய அமைச்சர் மீது மர்ம நபர் மை வீச்சால் பரபரப்பு

0 22

பீகாரில் மத்திய அமைச்சர் மீத மர்மநபர் மை வீச்சு நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பீகார் மாநிலம் பாட்னாவில் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட மக்களை பார்வையிட சுகாதாரத்துறை இணையமைச்சர் அஸ்வினி சவுபே பார்வையிட சென்றார். அப்போது, அமைச்சர் மீது மர்ம நபர் ஒருவர் அவர் மீது மை வீசி விட்டு ஓடிவிட்டார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

அந்த பகுதியில் டெங்குவின் பாதிப்பு அதிகரித்ததை அரசு கட்டுப்படுத்த தவறிவிட்டதால் தான் சுகாதாரத்துறை அமைச்சர் மீது மை வீசப்பட்டதாக கூறப்படுகிறது. மை வீசி ஓடிய மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

மை வீச்சு குறித்து அமைச்சர் அஸ்வினி சவுபே தெரிவிக்கும் போது, மக்கள் மற்றும் ஜனநாயகம் மீது மை வீச்சு நடத்தப்பட்டதாக கூறினார். மேலும் இதுபோன்ற செயல் கண்டிக்கத்தக்கது என்றார்.