தமிழகம் வந்த உள்துறை அமைச்சர் அமித்ஷாவிற்கு முதல்வர் பழனிச்சாமி உற்சாக வரவேற்பு

Get real time updates directly on you device, subscribe now.

தமிழகத்தில் வருகின்ற சட்டமன்ற தேர்தல் நெருங்கும் சூழ்நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சென்னை வந்துள்ளார். இரண்டு நாள் அரசு முறை பயணமாக சென்னை வந்த அமித்ஷாவை தமிழக முதல்வர் மற்றும் துணை முதல்வர் வரவேற்றனர்.

தமிழகத்தில் மெட்ரோ ரயில் சேவை, புதிய நீர்த்தேக்கம் அர்ப்பணிப்பு உள்படபல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு தொடங்கி வைக்க 2 நாள் பயணமாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சென்னை வந்துள்ளார்.

டெல்லியில் இருந்து தனி விமானத்தில் புறப்பட்டவர் மதியம் 2 மணி அளவில் சென்னை விமான நிலையத்தை வந்தடைந்தார் . விமான நிலையத்தில் தமிழக முதல்வர் பழனிச்சாமி,துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்,அமைச்சர்கள் ஜெயக்குமார்,பெஞ்சமின், தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் உள்ளிட்டோர் வரவேற்றனர்.

விமான நிலையத்திலிருந்து அமித்ஷா ஓட்டல் செல்லும் வழியில் பாஜக – அதிமுகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். சாலையின் இருபுறமும் உள்ள அதிமுக- பாஜக தொண்டர்கள் உற்சாகத்துடன் நடனமாடி வரவேற்றுள்ளனர். இதில் அதிமுகவினர் கட்சி கொடியுடன் ஆடல் பாடல் நிகழ்ச்சியில் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.

இன்று மாலை கலைவாணர் அரங்கில் நடைபெறும் நிகச்சியில், தமிழகத்தில் மெட்ரோ ரயில் திட்டம், உயர்மட்ட சாலை திட்டம்,சென்னை வர்த்தக மையம் விரிவுபடுத்தும் திட்டம் உள்ளிட்ட ரூ.67,378 கோடியிலான திட்டங்களை தொடங்கி வைக்கிறார்.

மேலும் பல்வேறு திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழாவும் நடைபெறுகிறது. இந்த விழாவுக்கு முதலமைச்சர் பழனிசாமி தலைமை வகிக்கிறார் . துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சிறப்புரை ஆற்றுகிறார். இதனைத்தொடர்ந்து அமித்ஷாவும் உரையாற்றவுள்ளார்.

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More