IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

கடல் கன்னி என்பது கட்டுக்கதை ! கடல் அதிசியங்கள் பற்றி மனம் திறக்கும் உங்கள் மீனவன் மூக்கையூர் !

30

Get real time updates directly on you device, subscribe now.

இளம் தலைமுறைகளுக்கு யூடியுப் என்பது தங்களின் திறமைகளை வெளிக்காட்டி அதன் மூலம் முன்னேற்றம் காண்பதற்கான ப்ளாட்பாரமாக இருக்கிறது.

யூடியுப்பில் இலட்சக்கணக்கான சேனல்கள் இருந்தாலும் தனியாக தெரிகிறார் இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த உங்கள் மீனவன் மூக்கையூர்.

இவரது இயற்பெயர் கிங்ஸ்டன்,  6 ம் வகுப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டு மீன்பிடித்தொழிலின் மீதுள்ள ஆர்வம் மற்றும் குடும்ப சூழ்நிலை காரணமாக தனது 11 வயதில் மீன்பிடிக்க சென்றுள்ளார்.

சிறுவயதில் இருந்தே மீன்பிடித்தொழிலை செய்து வருவதால் கண்களைக் கட்டி நடுக்கடலில் சென்று விட்டால் கூட, எந்த திசையில் இருக்கிறேன் என சொல்லும் அளவிற்கு கடல் இவருக்கு பழக்கமாகிவிட்டதாம்.

தற்பொழுது 5 இலட்சத்துக்கும் அதிகமானோர் இவரை பின் தொடர்கின்றனர்.

ஆரம்பத்தில் டிக் டாக் மூலமாகவே தன் வீடியோ பயணத்தை ஆரம்பித்திருக்கிறார்.

பின்பு ஒரு சமயம், சுறா மீனை தூக்குவது போன்ற வீடியோ அப்டேட் செய்த பின்பே நிறைய லைக்குகளும் கமெண்ஸ்களும் வந்திருக்கின்றன.

Related Posts
1 of 7

அதில் சிலர், உங்கள் வீடியோ டிஸ்கவரியில் வருவது போல உள்ளது என என்னை உற்சாகமூட்டியிருக்கிறார்கள்.

உங்கள் வீடியோக்களை டிக் டாக்கில் அப்டேட் செய்வதற்கு பதிலாக யூடியுப்பில் பதிவு செய்தால் பணம் சம்பாதிக்கலாம் என்று நலம் விரும்பிகள் சிலர், சொன்ன பின்பே யூடிப்பில் களமிறங்கி சாதனை படைத்து வருகிறார்.

கடலும் கடல் கன்னியும் 

பெரிய நீலத்திமிங்கலங்கள் எங்களது படகு அருகில் செல்வது, கடலில் இருக்கும் அனைத்து உயிரினங்களையும் கண்டவர்கள் யாரும் இருக்க முடியாது. அவ்வாறு ஒவ்வொரு நாளும் பிரம்மிப்பூட்டும் ஒன்றே கடல்.

எனது அனுபவத்தில் கடல் கன்னி என்பதை பார்த்ததில்லை. 

பெரியவர்களும் இதை உறுதியாக சொல்வதில்லை.

என்னைப் பொறுத்த வரைக்கும் இது ஒரு கட்டுக்கதை போலத்தான் தோன்றுகிறது என்கிறார் உங்கள் மீனவன்.

Get real time updates directly on you device, subscribe now.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More