IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

தவறை ஒருபோதும் ஏற்றுக் கொள்ளாதவர் டிரம்ப் – முன்னாள் துணை அதிபர் ஜோ பிடன்

Get real time updates directly on you device, subscribe now.

அமெரிக்காவின் மினியாபொலிசில் ஜார்ஜ் பிளாயிட் படுகொலையை அடுத்து அமெரிக்காவில் பெரும் கலவரம் வெடித்து வருகிறது. இதனையடுத்து அமெரிக்க ஜனநாயகக் கட்சி அதிபர் வேட்பாளர் மற்றும் முன்னாள் துணை அதிபர் ஜோ பிடன் பிலடெல்பியாவில் பத்திரிகையாளர் சந்திப்பில் ஜார்ஜ் கொலை குறித்துப் பேசினார்.

அப்போது அவர் தெரிவித்திருப்பதாவது, நாம் ஏற்கனவே கொரோனா பாதிப்பால் அதிக வலியில் உள்ளோம். இந்த நிலையில் தற்போது நமக்கு மேலும் வலி வேண்டாம். நடந்து முடிந்த பிரச்னை குறித்து விரிவான அலச வேண்டும் டிரம்பின் நிர்வாகத் திறமை இன்மை மற்றும் கவனக் குறைவால்தால் ஒரு லட்சம் அமெரிக்கர்கள் மரணம் அடைந்துள்ளனர்.

டிரம்ப் என்றுமே அவருடைய தவறுகளுக்கு பொறுப் பேற்க மாட்டார். ஆனால் நான் அப்படிக் கிடையாது. என் செயல்களுக்கும் தவறுகளுக்கும் என்றுமே பொறுப்பேற்கும் குணம் கொண்டவன் நான்’ என்றார். மேலும் தொடர்ந்து பேசுகையில், டிரம்ப் அரசு வன்முறை போராட்டங்களை எவ்வாறு கட்டுப்படுத்துவது எனத் தெரியாமல் தவறான முடிவுகளை எடுத்து வருகிறது.

போராட்டத்தை ஒடுக்க, பிளாஷ் கிரனேட், ரப்பர் புல்லட்கள் போன்ற ஆபத்தான ஆயுதங்கள் பயன்படுத்துகின்றனர். இது மட்டுமல்லாமல் நிலைமை மோசம் அடைந்தால் ராணுவத்தை அழைக்கப்போவதாக டிரம்ப் கூறுவது, ஆபத்தானது என பிடன் தெரிவித்தார்.

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader