பில்கேட்சை சந்தித்த மகிழ்ச்சியில் பிரபல நடிகரின் மனைவி செய்த காரியம்
மைக்ரோசாஃப்ட் நிறுவனரும், உலகின் நம்பர் ஒன் பணக்காரருமான பில்கேட்ஸ் கடந்த சில நாட்களாக இந்தியாவில் சுற்றுபயணம் மேற்கொண்டு வருகிறார். அவர் சமீபத்தில் பிரதமர் மோடி உட்பட முக்கிய பிரபலங்களை சந்தித்து வருகிறார். இந்நிலையில் தென்னிந்திய நடிகரும் தெலுங்கு சூப்பர் ஸ்டாரான ராம் சரணின் மனைவி உபாசனா காமினேனி கொனிதேலா பில்கேட்சை சந்தித்துள்ளார்.
பெங்களூரில் மரியாதை நிமித்தமாக பில்கேட்சை சந்தித்ததால் தனக்கு மிகுந்த மகிழ்ச்சி என்று தனது சமூக வலைதள பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார் உபாசனா. அந்த சந்திப்பில் பில்கேட்சுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தையும் பதிவிட்டுள்ளார்.
இந்தியா உட்பட உலகம் முழுவதும் பில்கேட்ஸ் தனது அறக்கட்டளை மூலம் பல்வேறு சமூக பணிகள் செய்துவரும் நிலையில், உபாசனாவும் தெலுங்கு மாநிலங்களில் சமூக பணிகள் செய்து வருகிறார். இந்திய மக்களை நோயில்லாமல் பாதுகாப்பதற்கான வழிகள் குறித்தும் உபாசனா பில்கேட்ஸீடன் கலந்துரையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.