கும்ப மரியாதையுடன் உதயநிதி ஸ்டாலினுக்கு வரவேற்பு

Get real time updates directly on you device, subscribe now.

திருச்சிக்கு வருகை தந்த உதயநிதி ஸ்டாலினுக்கு கும்ப மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது.

திமுக பிரமுகர்கள் இல்ல திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் இன்று திருச்சி வந்தார். அங்கு அவருக்கு மேல சிந்தாமணி பகுதியில் திருச்சி திமுக தெற்கு மாவட்டம் சார்பில் கும்ப மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதனையடுத்து உதயநிதி ஸ்டாலின் அந்தப்பகுதியில் திமுக கொடியினை ஏற்றினார். அவருடன் திருச்சி தெற்கு மாவட்ட செயலாளரும் சட்ட மன்ற உறுப்பினருமான மகேஷ் பொய்யாமொழி மற்றும் இளைஞரணியினர் உடனிருந்தனர்.

அதன்பின்னர் திருச்சியிலிருந்து திருக்குவளை செல்லும் உதயநிதி அங்கிருந்து தேர்தல் பிரச்சாரத்தை தொடங்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More