100 நாள் பிரச்சாரத்திற்காக தயாராகும் உதயநிதி ஸ்டாலின்

Get real time updates directly on you device, subscribe now.

திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் நாளை முதல்(வெள்ளிகிழமை) தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட ஆயத்தமாகி வருகிறார். இதற்காக 100 நாள் பிரச்சாரத்தில் ஈடுபட முடிவு உள்ளார்.

வருகின்ற 2021 சட்டமன்ற தேர்தலுக்கான வேலையை தமிழக அரசியல் கட்சிகள் தொடங்கிவிட்டன. அதற்கான முன்னோட்ட பணிகளுக்கான வேலையை அரசியல் தலைவர்களும் தொடங்கி விட்டனர். இதற்காக திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் நாளை முதல் 100 பிரச்சார திட்டத்தை தொடங்க உள்ளார்.

மறைந்த கருணாநிதி பிறந்த ஊரான திருவாரூர் மாவட்டம் திருக்குவளையில் இருந்து தனது பிரச்சாரத்தை தொடங்கும் உதயநிதி முதற்கட்டமாக தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொள்ளவுள்ளார்.

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More