அடிமை அரசு மீண்டும் கைது நடவடிக்கை! நாகை துறைமுகத்தில் மீண்டும் உதயநிதி கைது

Get real time updates directly on you device, subscribe now.

தமிழக சட்டமன்றத் தேர்தல் பணியில் களமிறங்கி இருக்கும் திமுக, ஆன்லைன் உறுப்பினர் சேர்க்கை, தமிழகம் மீட்போம் போன்ற நடவடிக்கைகளை கையாண்டு, மீண்டும் ஆட்சிகளை கைப்பற்றியே ஆக வேண்டும் என முனைப்பு காட்டி வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 6 மாதங்கள் இருக்கும் சூழ்நிலையில் தற்போதே அதற்கான பரப்புரையை ஆரம்பித்துவிட்டார் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின்.

கொரோனா வைரஸ் பரவல் காலத்தில் கூட்டங்கள் சேரக்கூடாது என்ற அரசு அறிவித்திருந்த நிலையில், அதனை மீறி திருப்பூர் மாவட்டம் திருக்குவளையில் நேற்று பரப்புரை கூட்டம் நடத்தினார். அதனால் போலீசார் அவரை நேற்று மாலை கைது செய்தனர்.

கைது செய்தாலும் திமுகவின் தேர்தல் பரப்புரை தொடரும் என கூறியிருந்தார். அதன் படி, இன்று நாகை மாவட்டம் அக்கரைப்பேட்டை துறைமுகத்தில் மீண்டும் பிரச்சாரம் நடத்தினார் உதயநிதி.

இந்த நிலையில், அரசின் உத்தரவை மீறி கூட்டம் நடத்தியதற்காக உதயநிதி ஸ்டாலினை இன்று மீண்டும் போலீசார் கைது செய்தனர். அவருடன் கே.என். நேரு மற்றும் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் உள்ளிட்டோரும் கைது செய்யப்பட்டனர்.

கைது நடவடிக்கையை கண்டித்து உதயநிதி டுவிட்டரில் தெரிவித்திருப்பதாவது, உலக மீனவர் தினத்தையொட்டி நாகை அக்கரைப்பேட்டை மீனவ கிராம மக்களை சந்திக்க சென்றபோது அடிமை அரசு மீண்டும் எங்களை கைது செய்துள்ளது.

கயிறுகட்டி தடுக்க முடியாதது கடல். அதைப்போல கழகத்தின் எழுச்சியையும் எடுபுடிகளால் அடக்க முடியாது. ‘விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்’ பிரச்சார பயணம் தொடரும் என டுவிட்டரில் தெரிவித்திருந்தார்.
#breakingnews #justin #udhyanidhiarrestedagain

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More