IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

மகாராஷ்டிரா மாநில முதல்வராக உத்தவ் தாக்கரே பதவியேற்கிறார்

258


மகாராஷ்டிரா அரசியலில் ஏற்பட்ட குழப்பங்கள் தற்போது முடிவுக்கு வந்துள்ளன. மகாராஷ்டிராவில் முதலமைச்சர் பதவி யாருக்கு என்பதில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக பாஜகவுடனான ஏற்பட்ட கூட்டணி உடைந்தது. இதனையடுத்து காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து சிவசேனா கட்சி ஆட்சி அமைக்க நினைத்திருந்தது.

ஆனால் அதன்பிறகு ஏற்பட்ட பல்வேறு அரசியல் குழப்பங்களால் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக சிவசேனா ஆட்சியமைக்க வில்லை. இதையடுத்து சனிக்கிழமை காலை 8 மணியளவில் பட்னாவிஸ் முதலமைச்சராகவும் அஜித் பவார் துணை முதலமைச்சராகவும் பதவி ஏற்றனர்.

இந்த சம்பவம் இந்திய அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும், இந்த நடவடிக்கைகள் அனைத்தும் பாஜக தலைவரும் உள்துறை அமைச்சருமான அமித் ஷாவின் அரசியல் சதுரங்கத்தால் தான் நிறைவேறியது என சமூக வலைதளங்களில் பரவலான கருத்துக்கள் பரவியது.

இந்நிலையில் முதலமைச்சராக பதவியேற்ற தேவேந்திர பட்னாவிஸ் மற்றும் அஜித் பவார் நேற்று பதவி ராஜினாமா செய்தார்கள். இதனையடுத்து ஆளுநருக்கு அழைப்பு விடுத்த சிவசேனா மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் 166 எம்எல்ஏக்களின் ஆதரவு கடிதத்தை அளித்து ஆட்சியமைக்க கோரினார்.

இதனை ஏற்றுக் கொண்ட ஆளுநர் உத்தவ் தாக்கரேவை முதல்வராக நியமிப்பதாகவும், 28ம் தேதி மாலை 6.40 மணிக்கு பதவிப்பிரமாணம் செய்து வைப்பதாகவும் கடிதம் எழுதினார். மகாராஷ்டிராவில் ஏற்பட்ட அரசியல் குழப்பங்களுக்கு இடையே ஒரு வழியாக உத்தவ் தாக்கரே முதல்வராக பதவியேற்கவுள்ளார்.

இந்த கூட்டணி குறித்து பேசிய உத்தவ் தாக்கரே மகாராஷ்டிரா முதல்வராவேன் என கனவில் கூட நான் நினைக்கவில்லை என்றும் இத்தகைய வாய்ப்பு கிடைக்க உதவிய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்டோருக்கு நன்றி எனவும் கூறினார். மற்றும் தாக்கரே குடும்பத்தில் இருந்து வரும் முதல் முதல்வரும் இவரே. நான் முதல்வராக பதவியேற்றதும் டெல்லி சென்று எனது மூத்த சகோதரரான பிரதமர் மோடியை சந்திப்பேன் என்றார்.