IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

கோவையில் மீண்டும் தனது சேவைகளை துவக்கியது ஊபர்

Get real time updates directly on you device, subscribe now.

அரசு பொது ஊரடங்கு 4.0 வழிகாட்டுதலுக்கு இணங்கப் பாதுகாப்பு, நலம், மற்றும் வசதியான போக்குவரத்துத் தீர்வுகளைத் தனது பயணிகளுக்கு வழங்கும் வகையில் கோவையில் தனது சேவைகளை மீண்டும் துவக்கியது ஊபர் நிறுவனம்.

கோவைப் பயணிகள் இனி ஊபர் ஆட்டோ, ஊபர்கோ, பிரிமியர், இண்டர்சிட்டி, அவர்லி ரென்டல் சர்வீசஸ் ஆகிய சேவைகளின் அணுக்கத்தைப் பெறலாம். மாநிலம் மற்றும் அனுமதிக்கப்பட்ட மண்டலங்களில் மட்டும் உரிய அங்கீகாரத்துடன் ஊபர் இண்டர்சிட்டி பயணங்கள் வரையறுக்கப்படும்.

இது குறித்து ஊபர் ரைட் ஷேரிங்க் தென் இந்தியா பிரிவுத் தலைவர் கனிகா மல்ஹோத்ரா கூறுகையில் ‘கோவையில் எங்களது சேவைகளை மீண்டும் தொடங்குவதில் மகிழ்ச்சி அடைகிறோம். போக்குவரத்துக்கு முன்னுரிமை அளித்து முன்னெடுத்துச் செல்வதுடன், பயணிகளுக்குப் பாதுகாப்பான அனுபவத்தையும் உறுதிப்படுத்துகிறோம்.

எங்கள் சமூகத்தின் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு ஆகியவை எங்கள் முன்னுரிமைப் பட்டியலில் முதலிடத்தில் இருக்கும். தற்போது சேவைகளை மீண்டும் தொடங்கும் நிலையில் தொடர்ந்து எப்போதும் முன்னுரிமை அளிப்போம். பாதுகாப்பு குறித்து எங்கள் பயணிகள் எப்போதும் விழிப்புணர்வுடன் இருப்பதுடன், அரசு மற்றும் பொதுச் சுகாதார ஆணைக்குழுக்கள் அவ்வப்போது அறிவுறுத்தும் ஆலோசனைகளையும் கடைப்பிடிக்க வேண்டுகிறோம்’ என்றார்.

கோவிட்-19 கொள்ளை நோய்த் தொற்று பரவாமல் தடுக்க அதிகபட்ச பாதுகாப்புத் தரக் கட்டுப்பாடுகளை உறுதிப்படுத்துவதுடன், மாநில அரசுகளின் வழிக்காட்டுதலையும் கடைப்பிடிக்கிறோம். முக கவசங்கள், சானிடைசர்கள், கிருமி நாசினிகள் உள்ளிட்ட பிபிஇ உபகரணங்கள் உள்ளிட்ட விரிவான நடவடிக்கைகளை ஓட்டுனர்களுக்கு வழங்குவதுடன் பாதுகாப்புக் காணொலிப் பயிற்சிகளையும் அவர்களுக்கு ஊபர் அறிமுகப்படுத்தி உள்ளது.

இந்தியாவில் மே 18 முதல் செயலியில் கோ ஆன்லைன் செக்லிஸ்ட், முகக் கவசம் சரிபார்த்தல், அனைவருக்குமான கூட்டுப் பொறுப்பு, நிகழ் நிலைப்படுத்தப்பட்ட ரத்துக் கொள்கை, புதிய இருக்கைக் கட்டுப்பாடுகள் , பகிர்சவாரி சுகாதாரப் பாதுகாப்புக் கல்வி என ஏராளமான புதிய அம்சங்களைப் பயணிகளும், ஓட்டுனர்களும் காணலாம்.

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader