டுவிட்டரில் தேவையற்ற வார்த்தைகளை மறைப்பது எப்படி..?

Get real time updates directly on you device, subscribe now.

டுவிட்டரில் நமக்குப் பிடிக்காத கணக்குகளை Mute செய்யலாம் என்பது அனைவருக்கும் தெரியும் ஆனால், பலருக்கு தெரியாதது டுவிட்டரில் வரும் வார்த்தைகளை மறைப்பது எளிது என்பது.

நாம் பின்தொடரும் அனைவரும் நமக்குப் பிடித்த தகவல்களைப் பகிர்வார்கள் என்று கூற முடியாது. எனவே, சில நேரங்களில் நமக்குப் பிடிக்காத வார்த்தைகளும், தேவையற்ற Hashtag செய்திகளும் மற்றவர்களால் நம் டைம் லைனுக்கு வரும்.

டுவிட்டர் தரும் இந்த வசதிகளால் இவற்றை மறைக்க முடியும், அதாவது நம் டைம் லைனில் வராதபடி செய்ய முடியும். Image Credit – https://help.twitter.com/

iOS திறன்பேசியாக இருந்தால், குறிப்பிட்ட வார்த்தைகளை Double Click செய்தாலே Mute என்ற வசதி வரும், இதன் மூலம் விரைவாகச் செய்ய முடியும். Android திறன்பேசிகளில் இது போன்று முடியாது காரணம், எழுத்துக்களை Copy செய்யும் வசதியில்லை.

எனவே, ஒவ்வொரு வார்த்தையாக Hashtag ஆகியவற்றை கீபோர்டு வழியாக கிளிக் செய்ய வேண்டும். டுவிட்டரில் வரும் வார்த்தைகள், Hashtag யை மறைப்பதன் மூலம் நாம் விரும்பாத டுவிட்களை நம் டைம் லைனில் இருந்து மறைக்க முடியும். இந்த தகவலை உங்களது டுவிட்டர் நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader