டுவிட்டரில் டிரெண்டாகும் சிம்புவின் அட்டகாசமான மாநாடு பர்ஸ்ட் லுக் போஸ்டர்

Get real time updates directly on you device, subscribe now.

சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு நடித்துவரும் ஈஸ்வரன் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் தீபாவளி விருந்தாக ரசிகர்கள் மத்தியில் வெளியாகி பெரும் வரவேற்பு பெற்றது.

இந்நிலையில் அவர் நடித்துவரும் மற்றொரு படமான மாநாடு திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நவம்பர் 21 ஆம் தேதி காலை 10.44 மணிக்கு வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில் சிறிது நேரத்திற்கு முன் சிம்புவின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் சமூக வலைதள பக்கத்தில் அட்டகாசமான மாநாடு படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது.

அப்துல் காலிக் என்ற இஸ்லாமிய இளைஞர் கேரக்டரில் நடித்து வரும் சிம்பு, இஸ்லாமிய தோற்றத்துடன் தலையில் ரத்தம் வழிந்து கொண்டிருக்கும் நிலையிலும் தொழுகை செய்வது போல் இருக்கும் இந்த மாஸான போஸ்டர் உண்மையில் சிம்புவின் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது.

கடந்த இரண்டு நாட்களுக்கு வெளியான பர்ஸ்ட் லுக் புரோமோ போஸ்டரில் இஸ்லாமிய இளைஞர் வேடத்தில் சிம்பு கையில் துப்பாக்கி வைத்துக் கொண்டு தொழுகையில் இருப்பது போன்றும், பின்னணியில் அரசியல் கலவரம் நடப்பது போன்று இருந்தது.

இந்தப்படத்தில் சிம்பு, கல்யாணி பிரியதர்ஷன், எஸ்.ஜே.சூர்யா, பிரேம்ஜி, எஸ்.ஏ.சந்திரசேகர், உள்பட பலர் நடித்து வருகின்றனர். படத்தை வெங்கட்பிரபு இயக்கி வருகிறார். யுவன்ஷங்கரின் இசையில் உருவாகி வரும் இந்த படத்தை சுரேஷ் காமாட்சி தயாரித்து வருகிறார்.

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More