IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

தம்பி … நீ பேபி பவுலர் ப்பா – பாக்., வீரர் கிண்டல்

192

என்னை பொறுத்தவரை இந்தியாவின் ஜஸ்பிரித் பும்ரா ஒரு குழந்தை (பேபி) பவுலர் என்கிறார் பாக்.., முன்னாள் வீரர் அப்துல் ரசாக்.
கிளைன் மெக்ராத், வாசிம் அக்ரம் போன்ற மிகச்சிறந்த பவுலர்களுக்கு எதிராக நான் விளையாடி இருக்கிறேன்.

நான் விளையாடிய காலத்தில் உலகத்தரம் வாய்ந்த பந்து வீச்சாளர்களை எதிர்கொண்ட எனக்கு, பும்ரா போன்ற பவுலர்களை எதிர்கொள்வதில் பிரச்சினை இருந்திருக்காது. அவருக்கு தான் நெருக்கடி இருந்திருக்கும்.

ஆனாலும் அவர் நன்றாக செயல்படுகிறார். வெகுவாக முன்னேற்றம் கண்டு இருக்கிறார். அவரது வித்தியாசமான ஆக்‌ஷனும், துல்லியமான தாக்குதலும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்று அப்துல் ரசாக் கூறினார்.

File Image: Abdul Razzaq