IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

டிக்டாக்கை விலைக்கு வாங்க டுவிட்டர் நிறுவனம் முயற்சி

Get real time updates directly on you device, subscribe now.

உலகளவில் மிகவும் பிரபலமான டிக்டாக்கின் அமெரிக்க உரிமையை வாங்கும் முயற்சியில் மைக்ரோசாப்டை தொடர்ந்து, தற்போது டுவிட்டர் நிறுவனமும் முயற்சி செய்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

தென் சீன கடல் விவகாரம், வர்த்தக போரில் துவங்கிய அமெரிக்க- சீன மோதல் , கொரோனா வைரஸ் விவகாரத்தில் உச்சத்தை பெற்றுள்ளது. கொரோனா தகவல்களை திருட முயற்சிப்பதாக கூறி, ஹூஸ்டனில் உள்ள சீன தூதரகத்தை மூட அமெரிக்க உத்தரவிட்டது. இத்கு பதிலடியாக, சீனாவில் உள்ள அமெரிக்க தூதரகமும் மூடப்பட்டது.

இதனை தொடர்ந்து, சீன நிறுவனத்தின் டிக்டாக், வீசாட் ஆகிய மொபைல்போன் செயலிகள் அமெரிக்காவின் பாதுகாப்பு மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக கூறி, அதற்கு தடை செய்து அதிபர் டிரம்ப் குற்றம்சாட்டினார்.

இதற்காக டிக்டாக்கின் தாய் நிறுவனமான பைட்டான்சுக்கு 45 நாட்கள் அவகாசம் விதிக்கப்பட்டது. செப்டம்பர் 15க்குள் டிக்டாக்கின் அமெரிக்க உரிமத்தை அமெரிக்க நிறுவனத்திடம் விற்றுவிட வேண்டும் அல்லது தங்கள் நாட்டு செயலிக்கு தடை விதிக்கப்படும் என காலக்கெடு விதித்தார்.

இதனையடுத்து டிக்டாக்கின் அமெரிக்க உரிமத்தை வாங்கும் முயற்சியில் மைக்ரோசாப்ட் நிறுவனம் , அதன் தாய் நிறுவனமான பைட்டான்சுடன் பேச்சுவார்த்தை நடத்தியது.

இந்நிலையில், டிக்டாக்கின் அமெரிக்க உரிமத்தை வாங்கும் முயற்சியில் டுவிட்டர் நிறுவனமும் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த பேச்சுவார்த்தை ஆரம்ப கட்ட நிலையில் உள்ளது.

இருப்பினும், டிக்டாக்கை வாங்கும் முயற்சியில் மைக்ரோசாப்ட் நிறுவனம் தான் முன்னிலையில் உள்ளதாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவிக்க டிக்டாக், டுவிட்டர் மற்றும் பைட்டான்ஸ் மறுத்துவிட்டது.

Genuine Indian Payment Gateway

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader