IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

டிக் டாக் செயலியை விற்கனும் அல்லது நாட்டை விட்டு வெளியேறனும் – டிரம்ப் திட்டவட்டம்

Get real time updates directly on you device, subscribe now.

டிக் டாக் செயலியை அமெரிக்க நிறுவனத்திற்கு விற்க வேண்டும் அல்லது நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டிரம்பின் இறுதிக்கெடு வருகின்ற செப்டம்பர் 15ம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில் கெடுவை நீட்டிக்க முடியாது என டிரம்ப் திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.

இளைஞர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற சீனாவைச் சேர்ந்த பைட் டான்ஸ் நிறுவனத்தின் டிக் டாக் செயலியால் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் உள்ளதாக இந்தியா தடை செய்தது. இதேபோன்று அமெரிக்காவிலும், டிக் டாக் செயலியை தடை செய்து அதிபர் டிரம்ப் உத்தரவிட்டார்.

மேலும், செப்டம்பர் 15ம் தேதிக்குள் டிக் டாக்கின் செயல்பாட்டை அமெரிக்க நிறுவனத்துக்கு விற்க வேண்டும் அல்லது அமெரிக்காவை விட்டு வெளியேற வேண்டும் எனவும் திட்டவட்டமாக கெடு விதித்தார். இதனையடுத்து பைட் டான்ஸ் நிறுவனத்துடன் மைக்ரோசாப்ட் நிறுவனம் டிக் டாக் செயலியை வாங்குவதற்குப் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டிருந்தது.

இந்நிலையில் டிக் டாக் செயலியை அமெரிக்க நிறுவனத்திற்கு விற்பனை செய்வதற்கான இறுதிக்கெடு தேதியான செப்டம்பர் 15ம் தேதியை மேலும் நீட்டிக்க முடியாது என உறுதியாக டிரம்ப் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் கூறுகையில், ‛டிக்டாக் இறுதிக்கெடுவை நீட்டிக்கப் போவதில்லை. என்ன நடக்கிறது என்று பார்ப்போம், ஒன்று செயலியை விற்க வேண்டும் இல்லையேல் மூட வேண்டும். ஆகவே பாதுகாப்புக் காரணங்களுக்காக டிக் டாக் செயலியை மூடப்போகிறோமா அல்லது அமெரிக்க நிறுவனத்துக்கு விற்கப்போகிறார்களா என்பதைப் பார்ப்போம்,’ என்றார்.

Genuine Indian Payment Gateway

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader