IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

அமெரிக்காவைத் துரத்தும் கொரோனா பலி – டிரம்ப் வேதனை

Get real time updates directly on you device, subscribe now.

உலக நாடுகளில் கொரோனாவின் பலிக்கு அமெரிக்காவில் மட்டும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணிநேரத்தில் 2,502 பேர் பலியாகி உள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவில் கொரோனா பாதிப்புக்கு பலி எண்ணிக்கை 61,656 ஆக அதிகரித்துள்ளது.

இதுவரை 10 லட்சத்து 64 ஆயிரத்து 194 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.  ஒரு லட்சத்து 47 ஆயிரத்து 411 பேர் சிகிச்சை முடிந்து திரும்பி சென்றுள்ளனர். இவற்றில் பாதிப்பு எண்ணிக்கையில் நியூயார்க் (3,06,158 பேர்) மற்றும் நியூஜெர்சி (1,16,264 பேர்) நகரங்கள் முன்னணியில் உள்ளன.  இந்நகரங்களில் முறையே 23 ஆயிரத்து 474 மற்றும் 6 ஆயிரத்து 770 பேர் பலியாகி உள்ளனர்.

இந்நிலையில் அமெரிக்காவில் தொடரும் கொரோனா பலி எண்ணிக்கை குறித்து அதிபர் டொனால்ட் டிரம்ப் வேதனை தெரிவித்துள்ளார். ஜனாதிபதி டிரம்ப், வாஷிங்டன் வெள்ளை மாளிகையில் கூறியதாவது:

கொரோனா வைரசால் பலியானவர்களுக்காகவும், தங்களுக்கு அன்பானவர்களை இழந்து தவிக்கிற அனைவரின் குடும்பத்தினருக்காகவும் தொடர்ந்து நாம் பிரார்த்தனை செய்வோம். இது போன்று இதுவரை நமக்கு நேர்ந்தது இல்லை. நாம் ஒரே இதயத்தோடு துன்பப்படுகிறோம். அதே நேரத்தில் நாம் வெற்றி பெறுவோம். நாம் திரும்பவும் எழுந்து வருவோம். நாம் திடமாக இருப்போம். தற்போது கொரோனா வைரஸ் தொற்று நோயின் மோசமான நாட்கள் நமக்கு பின்னால் போய்விட்டதாக நமது வல்லுனர்கள் நம்புகிறார்கள்.

நமது நாட்டினை பாதுகாப்பான முறையில், விரைவில் திறக்கப் போவதை அமெரிக்கர்கள் எதிர்நோக்கி காத்திருக்கிறார்கள். இந்த சோதனையின்போது, மிகக் கடினமாக உழைக்கிற கோடிக்கணக்கான அமெரிக்கர்களை உண்மையிலேயே மிகப்பெரிய தியாகங்களை செய்யும்படி கேட்டோம். இது வேறெங்கும், யாராலும் சாத்தியப்பட முடியாத தியாகங்கள் ஆகும். இதுபோன்று நாம் ஒன்றைப்பற்றி எபபோதாவது பேசுவோம் என்று நாம் யாரும் நினைத்துக்கூட பார்த்தது இல்லை. என வேதனையுடன் தெரிவித்தார்.

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader