IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

ட்ரூ காலரை பயன்படுத்தி பெண்களுக்கு தொல்லை கொடுத்தவர் கைது

50

 

ட்ரூ காலர் செயலி மூலம் பெண்கள் நம்பரை எடுத்து அவர்களுக்கு ஆபாசா வீடியோக்கள் மற்றும் காதல் குறுஞ்செய்திகள் அனுபிய ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளியை சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவரின் வாட்ஸ்ஆப் எண்ணிற்கு, கடந்த சில தினங்களுக்கு முன்பு ஒரு புதிய எண்ணில் இருந்து காதல் குறுஞ்செய்திகள் வந்தது. ஆனால் மாணவி அதை பெரிதாக பொருட்படுத்த வில்லை. அதை தொடர்ந்து மாணவிக்கு அந்த எண்ணில் இருந்து காதல் செய்திகள் அடிக்கடி வந்த்து கொண்டே இருந்தது.

ஒரு கட்டத்தில் மிகவும் ஆத்திரமடைந்த மாணவி அந்த செல்போன் எண்ணை தொடர்பு கொண்டு தனக்கு இன்னும் சிறுது காலத்தில் திருமணமாகபோகிறது என கூறினார். ஆகையால் இதைப்போன்று குறுஞ்செய்திகளை அனுப்ப வேண்டாம் எனத் தெரிவித்தார்.

பின்னர் அந்த எண்ணில் இருந்து செய்திகள் வருவது நின்றுவிட்டது. ஆனால் அதற்கு பதிலாக ஆபாச படங்கள் வர தொடங்கிவிட்டது. இதனால் அந்த மாணவி திருப்பத்தூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

அந்த புகாரின் அடிப்படியில் போலீசார் அந்த எண்ணெய் வைத்து விசாரணை நடத்தினர். அதில் அந்த எண் நெல்லை மாவட்டம் கடையநல்லூர் முல்லிப்பாளையம் பகுதியை செர்ந்த வினோத் என்பவருக்கு சொந்தமானது என்பது தெரியவந்தது.

பின்பு வினோத் குறித்த தகவல்களை சேகரித்த போலீசார் சென்னை குரோம் பேட்டையில் இருப்பதாக கண்டுபிடித்தனர். உடனே போலீசார் அங்கு சென்று வினோத்தை கைது செய்து விசாரணை நடத்தினர். அதில் பல உண்மைகள் தெரியவந்துள்ளது.

அதாவது வினோத் குத்துமதிப்பாக 10இலக்க மொபைல் எண்களை ட்ரூ காலரில் பதிவிட்டு, அதில் பெண்கள் பெயர் எதுவும் வந்தால் உடனடியாக போனில் அந்த எண்ணை சேமித்து வைத்துக் கொண்டு அவர்களை காதல் வலையில் விழவைப்பதையே வேலையாக வைத்துள்ளார்.

அப்படி வலையில் விழும் பெண்களுக்கு ஆபாசமான படங்கள், செய்திகள் ஆகியவற்றை பகிர்ந்துள்ளார். மேலும் அது குறித்து உரையாடி உள்ளார். பின்னர் அவனிடம் நெருங்கி பழகும் பெண்களோடு தவறாக நடந்துள்ளார்.

இதனால் சுமார் 50-க்கு மேற்பேட்ட பெண்கள் பாதிக்கப்பட்டு இருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் போலீசார் முன்பின் தெரியாத நபரிடம் குறுஞ்செய்திகளோ, புகைப்படங்களோ, வீடியோக்களோ வந்தால் அந்த எண்ணை பெண்கள் உடனே ப்ளாக் செய்ய வேண்டும் என கூறியுள்ளனர்.

#truecaller #girl #torcher #man #arrested