IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

உலகளாவிய ஸ்பாம் அழைப்புகளில் இந்தியாவில் 15% அதிகரிப்பு

425

2019 உலகளாவிய ஸ்பாம் அழைப்பு ரேங்கிங்க் பட்டியலில் இந்தியா 5ஆம் இடத்துக்கு இறங்கினாலும், ஸ்பாம் அழைப்புகள் 15% அதிகரித்துள்ளது.

கடந்த இரு ஆண்டுகளில் ஸ்பாம் அழைப்புகள் இந்தியாவில் 15% அதிகரிப்பு

இந்தியாவில் 3 இல் 1 பெண்களுக்குப் பாலியல் தொந்தரவு அல்லது முறையற்ற அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்தி உலகளாவிய குறுஞ்செய்தி ஸ்பாம் குறியீட்டில் இந்தியாவுக்கு 8 ஆவது இடமாக உள்ளன.

2019இல் ஸ்பாம் அழைப்புகளால் பாதிப்புக்கு உள்ளான முதல் 20 நாடுகளின் பட்டியலை உள்ளடக்கிய வருடாந்திர ட்ரூ காலர் இன்சைட்ஸ் ஆய்வறிக்கையை இன்று ட்ரூகாலர் வெளியிட்டது. இந்த ஆய்வறிக்கை மூன்றாம் எடிஷண் மூலம் அதிகபட்ச ஸ்பாம் அழைப்புகளைப் பெற்ற நாடுகளின் ரேங்கிங்க் பட்டியலில் கணிசமான மாற்றம் இருப்பது தெரிய வந்துள்ளது.

இந்தியாவில் ஸ்பாம் அழைப்புகளின் நுணுக்கமான பார்வை

இந்த ஆய்வறிக்கையின்படி உலகளாவிய எண்ணிக்கை அடிப்படையில் ஸ்பாம் அழைப்புகளைப் பெற்ற நாடுகளில் இந்தியா 5 ஆம் இடத்துக்குக் கீழிறங்கப், பிரேசில் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. இருப்பினும், இந்தியாவிலுள்ள பயனீட்டாளர்கள் பெற்ற ஸ்பாம் அழைப்புகள் மாதம் / ஒரு நபருக்கான அழைப்பு 25.6 என்ற கணக்கில் பெருகியுள்ளது.

இது முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 15% அதிகமாகும். இந்த ஆண்டு ஆய்வறிக்கை மூலம் தெரிய வந்திருக்கும் சுவாரஸ்யமான விஷயம் என்னவெனில் கடந்த ஆண்டு பட்டியலிடப்படாத நிதிச் சேவை வழங்குவோர் பிரிவிலிருந்தே 10% ஸ்பாம் அழைப்புகள் வந்துள்ளன என்பதுதான்.

ஸ்பாம் அழைப்புப் பிரிவுகளில், 67% பயனீட்டாளர்களுக்குப், பல்வேறு சலுகைகள் மற்றும் நினைவூட்டல்களை வழங்க ஆபரேட்டர்களே அதிகம் அழைத்ததன் மூலம் முன்னணி ஸ்பாமர்களாக விளங்குகின்றனர். இருப்பினும், கைபேசி பணம் செலுத்தும் முறைகள் மற்றும் நடுத்தர வருமானமுள்ள குடும்பங்களின் எண்ணிக்கை நாட்டில் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், வங்கி & நிதி சார்ந்த நிறுவனங்களும், தொலைச்சந்தையியல் சேவைகளும், முறையே 10% மற்றும் 17% பெரிய ஸ்பாமர்களாக திகழ்கின்றன என ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.

மேலும், உலகளாவிய ஸ்பாம் குறுஞ்செய்தி குறித்து ட்ரூகாலர் ஆய்வு செய்து அதிக அளவில் ஸ்பாம் குறுஞ்செய்தி பெற்ற முதல் 20 நாடுகளைப் பட்டியலிட்டுள்ளது. வளரும் பிராந்தியங்களில் மட்டுமே ஸ்பாம் குறுஞ்செய்திகள் பெறப்படுவதை இத்தரவு உறுதிப்படுத்துகிறது.

ரேங்க் பட்டியலில் இந்தியா 8ஆவது இடம் வகிக்கப் பயனீட்டாளர்கள் சராசரியாக மாதம் 61 ஸ்பாம் குறுஞ்செய்திகளைப் பெற்றனர். இவ்வகை ஸ்பாம் செய்திகளால் பாதிக்கப்பட்ட முதல் மூன்று சந்தைகள் ஆப்பிரிக்கக் கண்டத்தில் இருக்கின்றன.

முழுமையான அறிக்கையை இங்கே பார்க்கவும்:

https://truecaller.blog/2019/12/03/truecaller-insights:-top-20-countries-affected-by-spam-calls-&-sms-in-2019/

கிராஃபிக்ஸுக்கு இங்கே பார்க்கவும்:
https://www.dropbox.com/sh/c1zpsewr8xdwbb5/AAD8Uli4tQQao5HuA7tIjn_Ta?dl=0