IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

பழிக்குப்பழியாக ஜாமீனில் வந்தவர் ஓட,ஓட விரட்டி வெட்டிக்கொலை

71

 

பழிக்குப்பழியாக ஜாமீனில் வெளியே வந்த வாலிபரை ஓட,ஓட விரட்டி வெட்டிக்கொலை செய்த 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

திருச்சி மாவட்டம், முசிறி அருகேயுள்ள திருஈங்கோய்மலையை சேர்ந்தவர் சுரேஷ்; (27) இவர் அதே கிராமத்தை சேர்ந்த தனது உறவினர் பெண் ஒருவரை காதலித்து திருமணம் செய்துள்ளார். இதற்கு அந்த பெண்ணின் தாத்தா அம்மையப்பன் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளார். இதனால் ஏற்பட்ட தகராறில் கடந்த ஆண்டு சுரேஷ் தனது நண்பருடன் சேர்ந்து அம்மையப்பனை வெட்டிக்கொலை செய்துள்ளார்.
இந்த வழக்கில் போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த சுரேஷ் கடந்த இரண்டு மாதத்திற்கு முன்பு ஜாமீனில் வெளியே வந்துள்ளார். பின்னர், பக்கத்து ஊரில் தனது மனைவியுடன் வசித்து வந்துள்ளார்.

Related Posts
1 of 16

சம்பவத்தன்று தனது சொந்த ஊரான திருஈங்கோய்மலைக்கு சுரேஷ் வந்ததையறிந்த, அவரது மனைவியின் உறவினர்கள் நேரில் வந்து, அம்மையப்பனை கொலை செய்தது தொடர்பாக பேசி தகராறில் ஈடுபட்டுள்ளனர். இரு தரப்பினக்கும் இடையே வாக்குவாதம் முற்றிய நிலையில் அவர்கள் அரிவாளால் சுரேசை வெட்ட முயன்றுள்ளனர். இதனால் பயந்து போன அவர் ஓடியுள்ளனர். இருப்பினும் விரட்டிச்சென்று சரமாரியாக வெட்டியுள்ளனர். இதில் ரத்த வெள்ளத்தில் சுரேஷ் துடி, துடி இறந்தார்.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் விரைந்து வந்து பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து சுரேசை வெட்டிக்கொலை செய்ததாக அதே பகுதியை சேர்ந்த சதீஷ்வரன் (30), மஞ்சுநாதன் (25), தனுஷ்கோடி (22) ஆகிய 3 பேரையும் தேடி வருகின்றனர்.
பழிக்குப்பழியாக நடந்த இக்கொலை சம்பவத்தால் அங்கு பெரும் பதற்றம் நிலவியது.

 

#Trichy #young #man #murder