IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

மனைவி- 2 மகன்களை கழுத்தறுத்து கொன்ற நகைக்கடைக்காரர் தற்கொலைக்கு முயற்சி

Get real time updates directly on you device, subscribe now.

 

திருச்சியில் தனது மனைவி மற்றும் 2 மகன்களை கழுத்தறுத்து கொலை செய்த நகைக்கடைக்காரர் தானும் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார்.

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகேயுள்ள ஊரணிபுரம் வெட்டு வாக்கோட்டையை சேர்ந்தவர் செல்வராஜ் (45). ஊரணிபுரத்தில் நகைக்கடை நடத்தி வருகிறார். இவருக்கு செல்லம் (43) என்ற மனைவியும், நிகில் (20), முகில் (14) என்ற 2 மகன்களும் இருந்தனர். இவர்களில் நிகில் மூளை வளர்;சிக் குன்றி இருந்தானாம். பல இடங்களில் சிகிச்சை பெற்றும் குணமாகாததால் செல்வராஜ் மிகுந்த மன வருத்தத்தில் இருந்து வந்துள்ளார்.

இந்நிலையில் செல்வராஜ் தனது மனைவி மற்றும் மகன்களை திருச்சிக்கு அழைத்து வந்து அங்குள்ள தனியார் விடுதியில் அறை எடுத்து தங்கியுள்ளார். நீண்ட நேரமாகியும் அறை திறக்கப்படாததால் சந்தேகம் அடைந்த விடுதி ஊழியர்கள் கதவை உடைத்து பார்த்த போது, அங்கு செல்லம் நிகில் , முகில் ஆகியோர் கழுத்து அறுக்கப்பட்டு, ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்துள்ளனர். செல்வராஜ் தனது கழுத்தில் கடுமையான காயங்களுடன் உயிருக்கு போராடி கிடந்துள்ளார்.

இது பற்றி தகவல் அறிந்த போலீசார் விரைந்து வந்து செல்வராஜை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.. அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையே போலீசார் விடுதியில் நடத்திய சோதனையில் அங்கு செல்வராஜ் எழுதிய கடிதம் ஒன்று சிக்கியுள்ளது. அதில், தன்னுடைய மகன் நிகில் ஆட்டிசம் நோயால் பாதிக்கப்பட்டதால், விரக்தியில் இந்த முடிவை எடுத்துள்ளதாக எழுதி இருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

#Trichy #Wife #jeweler #trying #suicide #2sons

 

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader