IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

திருச்சி மலைக்கோட்டையில் சிலைகள் திருடிய குற்றவாளி உ.பியில் கைது

6


திருச்சி மலைக்கோட்டையில் உள்ள ராணி மங்கம்மாள் அரசு அருங்காட்சியகத்தில் 2009ம் ஆண்டு மிக பழமை வாய்ந்த 31 சிலைகள் காணாமல் போனது. அருங்காட்சியகத்தின் சார்பாக மலைக்கோட்டை காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது.

அதன் அடிப்படையில் விசாரணை நடத்தி வந்த சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் காரைக்குடியை சேர்ந்த சத்தீஸ்குமார், ஆனந்தன், சிவா, மற்றும் திருப்பத்தூரை சேர்ந்த சிதம்பரம் ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.5 கோடி மதிப்புள்ள 21 சிலைகள் பறிமுதல் செய்யப்பட்டன்.


மேலும் தப்பியோடிய 5 குற்றவாளிகளை போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில், தப்பி ஓடிய குற்றவாளிகளில் காரைகுடி பட்டனம்பட்டி யை சேர்ந்த ராம்குமார் நேற்று உத்திரபிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். குற்றவாளியை தமிழகத்திற்கு அழைத்துவர போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.